கந்த சஷ்டி இறுதி நாளான நேற்று முருகன் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று சூரன் போர் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இங்கு மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் EPDP டக்ளசின் பெரிய பதாதைகளும் இலங்கை ஜனாதிபதியின் சிறிய பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அருவருக்கத் தக்க வகையில் ஈபிடிபி மகிந்தவின் படங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் தனது ஆதங்கத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளதுடன் ஈபிடிபியை ஜனாதிபதி ஒன்றில் அழிக்க வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என அர்த்தம் பட பல கருத்துக்களை கூறியதுடன் எமது ஜனாதிபதியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காதாம் என எனது நண்பர் சந்திர குமாரிடம் ஆரம்ப ஜனாதிபதித் தேர்தல் தேர்தல் நாட்களில் குறிப்பிட்டதையும் ஆதரவாளர்களிடம் நினைவு படுத்தினார் என அங்கஜனுக்கு நெருக்கமானவர் ஒருவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten