தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

இலங்கைக்குத் துரோகமிழைக்காதீர்கள்! அனந்தியிடம் தேசிய சுதந்திர முன்னணி வேண்டுகோள்!

இருநூறு கோடிகளை விழுங்கி ஏப்பமிடக் காத்திருக்கும் தபால் திணைக்களம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:36.02 PM GMT ]
இலங்கைத் தபால் திணைக்களம் இந்த ஆண்டில் சுமார் 200 கோடி ரூபா அளவில் நட்டத்தை எதிர்கொள்ளும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐ.தே.க. உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டில் தபால் திணைக்களம் 330 கோடி ரூபா நட்டமடைந்திருந்தது. கடந்த ஆண்டில் அது 285 கோடி ரூபாவாக குறைந்திருந்தது.
எதிர்வரும் ஆண்டில் தபால் திணைக்களம் உத்தேச மதிப்பில் 175 கோடி ரூபாவும், அதற்கடுத்த வருடத்தில் 150 கோடி ரூபா அளவில் நட்டத்தை எதிர்கொள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தபால் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை என்ற பெயரில் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தபால் திணைக்கள செயற்பாடுகள் சரிவர நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv6.html
இலங்கைக்குத் துரோகமிழைக்காதீர்கள்! அனந்தியிடம் தேசிய சுதந்திர முன்னணி வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:47.08 PM GMT ]
இலங்கைத் தாய்க்குத் துரோகமிழைக்க வேண்டாம் என்று அனந்தி சசிதரனிடம் தேசிய சுதந்திர முன்னணி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக குறித்த விசாரணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் குறித்த விசாரணைக்குழுவையும் அதன் விசாரணைகளையும் இலங்கை ராஜதந்திர மட்டத்தில் நிராகரித்துள்ளது. மேலும் குறித்த விசாரணைக் குழுவுக்கு இலங்கை வருவதற்கும் அனுமதியளிப்பதில்லை என்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எழிலனின் மனைவி. இறுதிப் போரின் பின்னர் அவரும் அவருடைய குழந்தைகளும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த பின்னர் அவர்களைப் பாதுகாத்தது இராணுவத்தினர்தான்.
அவர்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரின் மனைவி பிள்ளைகள் என்று தெரிந்த பின்னரும் அவர்களைப்பாதுகாத்தது இராணுவம்தான்.
அதன்பின்னர் வட மாகாண சபைக்குப்போட்டியிட்டு தெரிவான விடயத்திலும் அனந்திக்கு அரசாங்கமோ, இராணுவத்தினரோ தடையாக இருக்கவில்லை. அவ்வாறிருக்கு அனந்தி இராணுவத்தினருக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் செயற்படுவது இலங்கைத் தாய்க்கு இழைக்கும் பெரும் துரோகமாகும்.
இந்தத் துரோகத்தைக் கைவிட்டு, இலங்கைத் தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ முன்வர வே்ண்டுமென்று அவரிடம் தேசிய சுதந்திர முன்னணி வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜயந்த சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv7.html

Geen opmerkingen:

Een reactie posten