[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 02:03.29 AM GMT ]
புலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது.
புலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.
தங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள்.
நாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
பதாகைகள், சுவரொட்டிகள், காரியாலய அங்குரார்ப்பணம் என பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
தேசிய பத்திரிகைகளில் அரசாங்க செலவில் ஜனாதிபதியின் பெருமைகளையும் அரசாங்கத்தின் பெருமைகளையும் பிரச்சாரம் செய்யும் விளம்பரங்கள் மூன்று நான்கு பக்களில் நாள்தோறும் பிரசூரமாகின்றன.
அரசாங்க நிறுவனங்களின் செலவில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றமை தெளிவாகியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க எந்த வகையிலும் முடியாது.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் ஜனாதிபதிக்கு முடியாது.
அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது.
ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகாரத்தை செய்வேன் என்ற ஜனாதிபதியின் தர்க்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான ஓர் நிலைமையில் ஈழக் கோரிக்கை தொடர்பான வாதம் அர்த்தமற்றது.
புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க எனக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஜனாதிபதி மீளவும் கோர ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு மூன்று தடவை முடியாது என்ற தலைப்பில் மாத்தறை நுபே பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw7.html
கிரிக்கெட் வீராங்கணைகளிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டமை நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 02:30.17 AM GMT ]
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கணைகள் அணியில் இடம்பெற வேண்டுமாயின், அதிகாரிகளுக்கு பாலியல் லஞ்சம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் வழங்கப்படக் கூடிய உச்ச அளவிலான தண்டனைகளை விதிக்க தயங்கப் போவதில்லை.
விசாரணைக்குழுவில் நிறுவனத்தின் நிறைவேற்று குழுவில் அங்கம் விகிக்கும் ஆண்கள் இடம்பெற்றுள்ள போதிலும், நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அணியில் உள்ளடக்கப்படுவதற்கு வீரங்கணைகளிடம் அதிகாரிகள் குறிப்பாக தெரிவுக்குழு அதிகாரிகள் பாலியல் ரீதியான லஞ்சத்தை வீராங்கணைகளிடமிருந்து எதிர்பார்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன் என மகளிர் அணி தெரிவுக்குழுவின் தலைவர் ஜயந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlxy.html
பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 03:52.23 AM GMT ]
பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பகுதியில் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நான்கு லயன்கள் முற்றாக மண் சரிவினால் மூடப்பட்டுள்ளது.
மண் சரிவில் சிக்குண்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
(இரண்டாம் இணைப்பு)
இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மிரியாபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண் சரிவில் இதுவரை, உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்! ஜனாதிபதி உத்தரவு
பதுளையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவசர கால நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் பிரகாரம், அப்பகுதி பேரிடர் முகாமைத்துவ அதிகாரியை மீட்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதேசத்தின் பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களும் அவரது பணிப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவ கமாண்டோக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இரண்டு பட்டாலியன்கள் விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பதுளைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை
பதுளை ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியாபெத்த என்னும் இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் மண் சரிவில் மூழ்கியுள்ளன.
இதுவரையில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மண் சரிவில் புதையுண்ட பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlx3.html
Geen opmerkingen:
Een reactie posten