[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 06:02.36 AM GMT ]
ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு டுடே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தி காரணமாக எதிர்வரும் தேர்தலில் ஆளுங்கட்சி வாக்குகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகின்றது.
எனவே எதிர்க்கட்சியின் வெற்றிவாய்ப்பைத் தடுக்கும் நோக்கில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டத்தில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்காகவே ஜாதிக ஹெல உறுமய கட்சியை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் பிரகாரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைகளை சாட்டாக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தை விட்டு ஹெல உறுமய வெளியேறவுள்ளது.
அதன் பின்னர் நாட்டின் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான கூட்டணி என்ற பெயரில் சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, ஜே.வி.பி மற்றும் உதிரிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான வாக்குகளை சிதறடித்து ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியை இலகுபடுத்துவது இதன் இறுதி நோக்கமாகும்.
தேர்தலின் பின்னர் மீ்ண்டும் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளும்போது ஹெல உறுமய முக்கியஸ்தர்களுக்கு அதிகாரமிக்க அமைச்சுப் பொறுப்புகளும், வேறு வரப்பிரசாதங்களும் வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு டுடே செய்திச் சேவை மேலும் தெரிவிக்கின்றது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை – ஜாதிக ஹெல உறுமய
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை ஆளும் கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலளிக்கும் வரையில் அரசாங்கத்திற்கு ஆதரவான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
இதன்படி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஜாதிக ஹெல உறுமய கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்காது என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo1.html
புத்தளம் மன்னார் வீதியின் எழுவன்குளம் பகுதி தற்காலிகமாக மூடல் (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 05:53.55 AM GMT ]
கலாஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய வனத்தை ஊடறுத்து செல்லும் இந்த வீதி கலாஓயா ஆற்றின் சப்பாத்து பாலம் ஊடாக மன்னார் வீதியுடன் இணைக்கின்றது.
ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து பெருக்கெடுத்துள்ளதால், தற்காலிகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் நோக்கி பயணிக்க வேண்டாம் என புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
பதுளையில் உயிர் நீர்த்தவர்களுக்கு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலி
பதுளையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக உயிர் நீர்த்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து பீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் வகையில் முதலாவது மெழுகு திரிக்கு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பிரேம்குமார் தீயிட்டு ஆரம்பித்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள் மெழுகு திரியில் தீபம் ஏற்றி உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்தனர். இதன்போது இன்றைய தினத்தினை துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அனைவருக்கும் கறுப்பு பட்டியும் அணிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo0.html
இலங்கை கடலில் சட்டவிரோதமாக நுழையும் படகுகளை தடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 05:43.59 AM GMT ]
அத்துடன் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கடற்படையினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் இருந்து மீன்களை கொள்வனவு செய்ய விதித்துள்ள தடை சம்பந்தமான தேவை நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளை பதிவு செய்ய அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 5 ஆயிரம் ரூபாவாக குறைக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மீனவர்களிடம் இருந்து மீன்களை கொள்வனவு செய்யும் போது மீன்பிடி திணைக்களம் நிலையான விலையை நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனை தவிர கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி மீன்களை வழங்குமாறு மீன்பிடி திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjoz.html
Geen opmerkingen:
Een reactie posten