தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

நாடாளுமன்றத்துக்கு வந்த கரட்டால் பரபரப்பு (செய்தித் துளிகள்)

இரண்டாக பிளவுபடும் சிங்களராவய! முக்கியமானவர்கள் பதவி விலகல்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 12:12.19 AM GMT ]
இலங்கையின் முன்னணி பௌத்த இனவாத அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
அதன் முக்கிய உறுப்பினர்களான தேசிய அமைப்பாளர் யக்கலமுல்லே பவர, உபதலைவர் புலியத்தே சுதம்ம ஆகிய தேரர்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். மேலும் அமைப்பை விட்டு தனித்து இயங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள மடிகல்லே பஞ்ஞாசீஹ தேரரும் விரைவில் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் அக்மீமன தயாரத்தின தேரரை தலைவராகக் கொண்டு சிங்கள ராவய அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கோத்தபாயவின் பொதுபல சேனா, விமல் வீரவங்சவின் ராவணா பலய போன்ற அமைப்புகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்றும் வசதிகள் சிங்கள ராவய அமைப்புக்கு கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த அமைப்பு பிளவுபட்டுள்ளது. அமைப்பிலிருந்து விலகிய முக்கியஸ்தர்கள் எதிர்வரும் நாட்களில் ராவணா பலய அல்லது பொதுபல சேனாவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlr4.html
மஹிந்த பாலசூரியவின் அதிரடி ஆரம்பம்! ஏழு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 12:24.21 AM GMT ]
சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏழு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் ஜனாதிபதிக்கு நம்பிக்கையான பிரதிப்பொலிஸ்மா அதிபர்களிடம் அதிகாரத்தை வழங்கவும், ஏனையவர்களை அதிகாரமற்ற பதவிகளுக்கு மாற்றுவதற்குமான நடவடிக்கையின் ஆரம்பமாக இந்த இடமாற்றங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் இன்று மூன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 08 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் இன்னும் ஏராளமான பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறான திடீர் இடமாற்றங்கள் வழங்கப்படலாம் என்று பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlr5.html
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்றுக்குழு இலங்கைக்கு விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 01:31.39 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்தக்குழு யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அனுமதி  கேட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கமும் வழங்கியுள்ளது.
இந்தக்குழு, பயங்கரவாதம் இராணுவத்தினாலும் நீதியினாலும் மாத்திரம் அடக்கப்படமுடியாதது. தீர்க்கமான கலந்துரையாடல்களும் அதற்கு அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தக்குழுவுக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஜீன் போல் லாபோர்டெ தலைமை தாங்குகிறார். குழுவில் பயங்கரவாத தடு;ப்பு தொடர்பான பல நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1624வது யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த குழுவின் விஜயம் அமைக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXls2.html
நாடாளுமன்றத்துக்கு வந்த கரட்டால் பரபரப்பு (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 02:22.03 AM GMT ]
நாடாளுமன்றத்துக்குள் கரட் மரக்கறி எடுத்து வரப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
தமது மேசைக்கு முன்னால் இந்த கரட் வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆளும் கட்சியினரும் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் குறித்த கரட்டை தூக்கி பிடித்த நளின் பண்டார, அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமும் கரட்டை போன்றது என்று குறிப்பிட்டார்.
நாட்டில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் எதற்கு? ஐ.தே.க
இரண்டு மூன்று பேர் ஆட்சி நடத்தும் நாட்டில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் எதற்கு என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் ஆட்சி நிர்வாகம் இரண்டு மூன்று பேருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்து தடவைகள் எரிவாயு விலையை அதிகரித்து ஒரு தடவை விலையை குறைத்து அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் காரணமாக அரசாங்கம் பீதியடைந்துள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்.
அரசாங்கம் பிரச்சாரம் செய்யும் திவிநெகும திட்டத்தில் யார் நன்மை அடைந்தார்கள்?
மூன்று வேளை சாப்பிட்டு இருக்க முடியும் என்றால் ஏன் இலங்கைப் பெண்கள் கழுத்து, கை, கால்கள் வெட்டப்டுவது தெரிந்து கொண்டே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடிச் செல்கின்றனர்?
இதன் மூலம் திவிநெகும திட்டத்தின் தோல்வி அம்பலமாகியுள்ளது. இரண்டு மூன்று பேர் ஆட்சி செய்யும் நாட்டில் நூற்றுக் கணக்கான அமைச்சர்களின் சேவை எதற்கு?
ஜெனீவா மற்றும் ஐரோப்பாவில் இலங்கைக்கு எதிராக பிரச்சினைகள் எழுப்பப்படுவதனையே அரசாங்கம் விரும்புகின்றது.
அவ்வாறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டால், போரையும், மின்சார நாற்காலியையும் காட்டி காட்டி மக்களின் வாக்குகளை திரட்ட முடியும் என அரசாங்கத்திற்கு தெரியும்.
ஒவ்வொரு கிராமத்திலும் 125 வீடுகள் அமைப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்னவாயிற்று?
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒய்வூதியம் வழங்குவதாக அறிவித்த அரசாங்கம் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளது என துனேஸ் கன்கந்த நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் வயதுகுறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனைசெய்தவர்களுக்கு தண்டம் விதிப்பு
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 24 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிவான் நீதிமன்றம் தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பண்டார மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று காலை தொடக்கம் பிற்பகல் நான்கு மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
குறித்த வியாபாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு என்ற காரணத்தினால் நீதிபதியினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
21வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.தே.க.வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடல்
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐ.தே.க. வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடல் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு ஹைட்பார்க்கில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடல் மற்றும் பொதுக் கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையே ஐ.தே.க. வின் ஹைட்பார்க் கலந்துரையாடலை குழப்புவதற்கு ஆளுங்கட்சி தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXls4.html

Geen opmerkingen:

Een reactie posten