[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 10:06.45 AM GMT ]
சோமாவதி என்பவரின் மகளானகங்கா ஜீவணி பிறக்கும் போது, முழு உடல் ஊனத்துடன் பிறந்தவர்.
பிள்ளை உடல் ஊனத்துடன் பிறந்தது என்று தெரிந்த தந்தை தனது பிள்ளைக்கு பெயர் கூட சூட்டாமல் மனைவியையும், பிள்ளையையும் தவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
ஆனால், அத்தனைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு, தனது பிள்ளையை கடந்த 38 வருடங்களாக பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் பராமரித்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு நாள் தாயும் மகளும் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, தாய் சோமாவதி உயிரிழந்துள்ளார்.
இவர் இறந்தது மகள் கங்காவுக்கு தெரியாததோடு, அயலவர்கள் வந்து பார்த்த போது தான் சோமாவதி இறந்த விடயம் தெரிய வந்தது.
சோமாவதிக்கும், மகள் கங்காவுக்கும் உறவினர்கள் யாருமே இல்லாத நிலையில், சோமாவதியின் அனைத்து இறுதிக் கிரியைகளையும் தோட்டப் பொது மக்கள் இணைந்து மேற்கொண்டனர்.
தற்போது கங்காவை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் தோட்டப் பொது மக்களில் சிலர் ஒரு வேளை உணவை வழங்கி வருவதோடு, சில வேளைகளில் கங்காவையும் மிக சிரமத்திற்கு மத்தியில் பராமரித்து வருகின்றனர்.
இதேவேளை வீட்டில் மின்சாரம் இல்லை. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், எவ்வித சிந்தையும் இல்லாத கங்கா, இரவு நேரங்களில் தனிமையில் இருட்டில் நித்திரைக் கொள்கின்றார்.
இது தொடர்பாக, தோட்ட நிர்வாகம், கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென அயலவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், கங்கா ஜீவணியை அரசாங்கமாவது பொறுப்பேற்று அநாதை இல்லத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu0.html
மஹிந்தவே ஐ.ம.சு.முன்னணியின் சிறந்த பொதுவேட்பாளர்: பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 10:12.55 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என தாம் கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தேர்தலின் போது இன்னும் சிறப்பான வேட்பாளர் ஒருவர் போட்டியிட முன்வருவாரானால், அவர் எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அவருக்கு நாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் சாயம் வெளுத்தது! மஹிந்தவே மிகச்சிறந்த பொதுவேட்பாளராம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மிகச்சிறந்த பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்ததான் அந்த வேட்பாளர்.
ஏனைய கட்சிகள் ஒன்று சேர்ந்த கொண்டுவர இருக்கும் பொது வேட்பாளர் யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாது. அவரது குறை, நிறைகள் எதுவும் தெரியாது.
ஆனால் மஹிந்தவைப் பற்றி நாட்டு மக்களுக்கு முழுமையாக எல்லாம் தெரியும். அந்த வகையில் பார்க்கும் போது மிகச்சிறந்த பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.
அவரைத் தவிர்த்து இன்னொரு பொதுவேட்பாளர் வருவார் என்று இரண்டு பக்கமும் சாராமல் காத்திருப்பதில் இனியும் பலனில்லை. அதன் காரணமாக ஜனாதிபதிக்கே இந்தத் தேர்தலில் ஆதரவு வழங்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.
சிங்கள, பௌத்த மக்கள் தற்போது சர்வதேச அழுத்தமொன்றுக்கு உட்பட்டுள்ளனர். அதன் தாக்கம் இப்போது அனைவராலும் உணரப்படுகின்றது. அமெரிக்காவில் கடன் வாங்கி, அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் வாங்கும் பொருளாதார நிலைமையை நாம் ஆதரிக்க முடியாது.
அவ்வாறான பொருளாதார நிலையிலிருந்து விடுடக் கூடிய ஆற்றலும், சர்வதேச சக்திகளின் அழுத்தத்திலிருந்து நாட்டை பாதுகாக்கும் ஆற்றலும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மட்டுமே உள்ளது.
எனவே இனியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை.பொதுபல சேனா பகிரங்கமாகவே ஜனாதிபதிக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கும் ஞானசார தேரருக்கும் இருந்து வந்த தொடர்பு குறித்து அவர் இதுவரை மறுத்தே வந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிராகவே தாம் செயற்படுவதாக பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இன்றைய அறிவிப்பின் மூலம் பொதுபல சேனாவின் சாயம் வெளுத்துள்ளதாக நடுநிலை சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu1.html
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்: ராஜித சேனாரத்ன
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 11:00.50 AM GMT ]
இது தொடர்பில் ஐரோப்பா ஒன்றியம் சிறந்த பதிலை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பரிந்துரைகளில் பிரதான விடயமான படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை நிறுவுவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கான அனுமதியை இந்த வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள எட்டு பரிந்துரைகளுள் இதுவரையில் ஐந்து பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 3 பரிந்துரைகளில் இரண்டிற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வாரம் பெற்றுக்கொண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை நிறுவுவதற்கான பரிந்துரை மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைத்தவுடன், குறித்த கட்டமைப்பை நாட்டில் செயற்படுத்த முடியும்.
அதன் பின்னர் நாட்டின் மீன்பிடி துறைக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைகள் அனைத்து பூர்த்தி செய்யப்படுவதோடு, அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி- இலங்கை மீன் வகைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu2.html
Geen opmerkingen:
Een reactie posten