[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 01:45.32 AM GMT ]
வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அனைத்து மக்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டே வரவு செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பாரியளவில் நலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மலர்களை நோகடிக்காது தேன் எடுப்பதனைப் போன்று மக்களுக்கு வலிக்காமல் வரி அறவீடு செய்ய அரசாங்கத்திற்கு தெரியும்.
நாட்டின் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்படும் தொகையை விடவும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks0.html
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்! 150 குடும்பங்கள் வெளியேற்றம்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 02:08.16 AM GMT ]
தேசிய கட்டட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு 150 குடும்பங்கள், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக அடிப்படையில் ஆபத்து நிலவக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவெரலியா, ராகலை தியனில்ல மற்றும் கொத்மலை வௌன்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 150 குடும்பங்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணப் பிரிவின் ஊடாக உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மண் சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து விழக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுவரெலியா மாவட்ட குடும்பங்கள் தற்காலிகமாக இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks1.html
திருச்சியில் இலங்கை தமிழ்ப் பெண் மாயம்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 03:54.04 AM GMT ]
திருச்சி வயலூர் ரோடு, சீனிவாசா நகர், ஏதென்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர் மனோகர். இவர் இலங்கை தமிழர். தற்போது கனடாவில் பணியாற்றி வருகிறார்.
திருச்சியில் இவரது மனைவி வளர்மதி, மகள் மனோசா (23) மற்றும் மகன்கள் வசித்து வருகின்றனர்.
மனோசா, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக தாதி பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ம் திகதி மருத்துவமனைக்கு சென்ற மனோசா, பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த பெண்ணின் தாய், அரசு மருத்துவமனை பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்தார். பொலிஸார் வழக்குப் பதிந்து மனோசாவை தேடி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks4.html
Geen opmerkingen:
Een reactie posten