தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

யாழில் 16 வயது இளைஞர் மாயம்- வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

நாடகம் தொடர்கிறது! ஹெல உறுமய-ஆளுங்கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தை
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 05:24.17 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஆளுங்கட்சி சார்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அலரி மாளிகை தகவல் வட்டாரங்களிலிருந்து எமக்குக் கிடைத்திருந்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் முன்னைய செய்தியொன்றில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்தப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.
எனினும் முன்னைய செய்தியில் குறிப்பிட்டிருந்தது போன்று அமைச்சர்களான பசில், சுசில் பிரேம்ஜயந்த, டளஸ் ஆகியோருடன் கடைசி நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவும் ஆளுங்கட்சி சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.
ஹெல உறுமயவின் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்ன தேரர், மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஹெல உறுமயவின் யோசனைகள் தொடர்பில் ஆளுங்கட்சி சார்பில் சாதகமான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணி ஒன்று அமைவதைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் தேவைப்பாட்டுக்கு அமைவாகவே ஹெல உறுமய இந்த நாடகத்தை முன்னெடுப்பதாக தெரிய வருகின்றது.
அத்துரலியே ரத்ன தேரரின் சந்திப்பின் பின் மாதுளுவாவே சோபித தேரரும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளமை இதற்கான எடுத்துக்காட்டாகும். முன்னதாக பொது அபேட்சகராக தான் போட்டியிட முடியாவிட்டால் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்.
ஆனால் இப்போது தான் பொது அபேட்சகர் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாதுளுவாவே சோபித தேரர், ரணிலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார். அத்துரலியே ரத்ன தேரருடனான சந்திப்பின் பின்னரே அவரது நிலைப்பாட்டில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் எண்ணத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ஹெல உறுமயவின் நாடகம் ஆளுங்கட்சிக்குப் பயன்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆளுங்கட்சி மற்றும் ஹெல உறுமயவிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றின் மூலம் இந்த நாடகம் முடிவுக்கு வரவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலம் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஹெல உறுமய கைவிடும் என்றே நம்பகமாக தெரிய வந்துள்ளது.
அதனை தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்ற வாதத்தை முன்வைத்து ஜனாதிபதிக்கு ஆதரவாக ஹெல உறுமய பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmszARcKXltz.html

யாழில் 16 வயது இளைஞர் மாயம்- வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 05:53.17 AM GMT ]
யாழ். குருநகர் பகுதியில் 16 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ். குருநகர் தொடர்மாடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ஜீவன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என இளைஞனின் தாயர் நேற்று பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 3 தினங்களாக உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில் இளைஞர் எங்கு இருக்கின்றார் என்று இதுவரை தெரியவில்லை.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை
வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் மாகாணசபை உறுப்பினர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் இன்றைய தினம் காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
இதில் தொற்று நோய்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt0.html

Geen opmerkingen:

Een reactie posten