மகிந்தவால் கொல்லப்பட்ட மலையகம் முகாமிலிருந்து வரும் சத்தங்கள்
அந்த முகாமிலிருந்து வரும் சத்தங்கள் காதையடைக்கின்றன, ஆனாலும் அந்த சத்தத்தின் மத்தியிலும் பரமேஸ்வரி அதிர்ச்சியால் உறைந்து போய் அமர்ந்திருக்கின்றார் இலங்கையின் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக பதியப்பட்டுவிட்ட அந்த மண்சரிவில் ஒரு நொடிக்குள் தனது குடும்பத்தில் நால்வரை இழந்தவர் பரமேஸ்வரி….
ஆனால் அந்த அனர்த்தம் எவ்வாறு நடைபெற்றது என்பதை என்பதை விவரிக்க தொடங்க அவரது மௌனம் கலைகிறது, செவ்வாய்கிழமை காலை எப்படி மலைகளின் மேலிருந்த மரங்கள் அசுரத்தனமாக ஆடத்தொடங்கின என்பதை அவர் தெரிவித்தார்-,
ஷஷநான் எனது குடும்பத்தினரை பார்த்து கத்தினேன், வெளியே ஓடும்படி கதறினேன்,உள்ளே ஓடி எனது பேரக்குழந்தையை கையிலெடுத்தேன், நாங்கள் வெளியே வந்த அந்த தருணத்தில் மரங்களும், பாறைகளும், எங்களை நோக்கி வந்தன. குழந்தை எனது கையை பிடித்துக் கொண்டிருந்தது எனினும் என்னால் அதனை பிடித்துக்கொண்டிருக்க முடியவில்லை, மண் குழந்தையை இழுத்துக்கொண்டு போய்விட்டது, என்னுடைய வீட்டுடன் சேர்ந்து உள்ளேயிருந்த நால்வரும் புதையுண்டுவிட்டனர் என தெரிவித்துவிட்டு அவர் மீண்டும் விம்ம தொடங்கினார்.
தனது குடும்பத்தை சேர்ந்த 11 பேரில் நான்கு பேரை பரமேஸ்வரி இழந்துள்ளார், அவர் அணிந்துள்ள அந்த பச்சை சேலையை தவிர வேறு எந்த உடமைகளும் மிஞ்சவில்லை, தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள கணேசா மகா வித்தியாலயத்தில் அவர் தங்கியுள்ளார் அது தான் அவருக்கு தற்போதுள்ள ஒரேயோரு தங்குமிடம்.
அவருக்கு அருகில் சரோஜா அமர்ந்திருக்கிறார்- அவர் கொழும்பில் ஹோமாஹவில் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்- அவரது நோயாளி கணவர் மகள் மகளின் கணவர் என அனைவரும் மண்சரிவில் பலியாகிவிட்டனர்.
நான் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன், ஆனால் முடியவில்லை அதன் பின்னரே நடந்ததை அறிந்தேன் என கதருகின்றார் அவர். சுமார் 800 ற்க்கு மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தவர்களையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இவர்களில் 75 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் தற்போது இரு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வழமை போல் இந்த பிள்ளைகள் அன்று காலையிலேயே பாடசாலைக்கு புறப்பட்டுள்ளனர், பாடசாலையில் இருந்த வேளையே 7.30 மணிக்கு நிகழ்ந்த மண்சரிவு குறித்து இவர்கள் அறிந்தனர். ஒரு சிலி நிமிடங்களுக்குள் அவர்களது முழுக் குடும்பங்களையும் இயற்கை காவுகொண்டுள்ளது. திரும்பி வந்த போது அவர்களின் வீடுகள் இருந்த இடங்கள் காணவில்லை.
யோகேஸ்வரியின் கதை மிகவும் பரிதாபமானது- அவர் அந்தப்குதியை சேர்ந்தவர் இல்லை ஆனால் அந்த வழியூடாகவே அவர் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வார் இவரது 3 பிள்ளைகளில் 6 வயது மகளை மண் அடித்துச் சென்றுவிட்டது. அரசாங்கம் ஒரு கிராமத்திற்க்கு மாத்திரம் எச்சரிக்கை விடுத்தால் போதாது அவர்கள் முழு கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும், எங்களுக்கு தெரியாது- நாங்கள் அவர்களை பாடசாலைக்கு அனுப்பினோம்- ஏன் அவர்கள் எங்களை எச்சரிக்கவில்லை என கதறினார் அவர்….





http://www.jvpnews.com/srilanka/85497.html
2ஜி இல் அகப்படுமா குடும்பம்
அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச் சதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் அக்.20-ல் குற்றங்கள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உத்தரவு தயார் நிலையில் இல்லாத காரணத்தால் அக்டோபர் 31-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
2ஜி வழக்கில் தொலைத் தொடர்புத் துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து ரூ. 200 கோடி, கலைஞர் டி.வி.க்கு கைமாறியது குறித்து அமலாக் கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/85507.html
Geen opmerkingen:
Een reactie posten