தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா?- நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி

பொலிஸ் பொறுப்பதிகாரியை தாக்கிய பொதுமக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 07:08.39 AM GMT ]
பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற செயல் காரணமாக கொதித்தெழுந்த பொதுமக்கள் அவரை அடித்து தாக்கியுள்ளனர்.
மாவனல்லையில் நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தின் சூழல்பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கடவத்தை பொலிஸ் நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விஜேரத்தின பயணித்த டபள் கெப் வாகனம், மாவனல்லை வலயாகட வளைவில் ஆட்டோ ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் அதிவேகத்தில் பயணித்த நிலையில், வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது.
இதன்போது தனது தவறை ஏற்றுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரி விஜேரத்தின, காயமடைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிய வருகின்றது.
குறைந்த பட்சம் அவரது வாகனத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி என்று பொதுமக்களை அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து கோபம் கொண்ட பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து பொலிஸ் அதிகாரியை அடித்து தாக்கியுள்ளனர். அவரது வாகனமும் பொது மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மாவனல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் நேற்றுமாலை கேகாலை பொதுவைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt3.html

போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா?- நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 08:21.17 AM GMT ]
தடுத்து நிறுத்த முடியாத இலங்கை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது .....
... போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வைக்கூட முன்னெடுக்கத் தடுமாறி கொண்டிருக்கும் மக்களை அதிகளவில் கொண்டதான வடபகுதியை விசேடமான பிரதேசமாக கருத்திற் கொள்ளாமையானது அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற வகையில் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டுபண்ணுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டுள்ளதாக பீற்றிக் கொள்கின்ற ஜனாதிபதி அந்தத் திட்டங்கள் போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா எனவும் அவர் கேள்வி ஒன்றினை எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt5.html

Geen opmerkingen:

Een reactie posten