யாழ்.நகரையண்டிய ஓட்டுமடம் அரசடிச்சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பொது மக்கள் இராணுவத்தினாலும், பொலிஸாரினாலும் தாக்கப்பட்டதை புகைப்படம் எடுக்க முற்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் சிவில் உடையிலிருந்த பொலிஸாரால்; தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். தான் ஊடகவியலாளர் என்பதை அவர் அடையாளப்படுத்திக்கொண்ட போதும், ஊடகத்தினை தரக்குறைவாக பேசிய அவர், ஊடகவியலாளரின் கைத்தொலை பேசியினை பறிமுதல் செய்து மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் யாழ்.போலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
இன்றிரவு மானிப்பாய் வீதி ஒட்டுமடம் அரசடிச் சந்தியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடு;ம்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருந்தார். விபத்தினை திரிபுபடுத்தி முறையற்ற பதிவினை மேற்கொள்ள பொலிஸார் முற்பட்ட போது அங்கு
பொலிஸாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதென விளக்கமளித்துள்ளார் யாழ்.பொலிஸ் நிலைய கூடிய பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலதிக பொலிஸார் வரவளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அங்கு செய்தி சேகரிக்கச்சென்ற யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் பொலிஸாரும், இராணுவத்தினரும் நடத்திய தாக்குதல் சம்பவத்தினை புகைப்படம் எடுத்துள்ளார். இதன் போது அங்கு சிவில் உடையில் நின்று பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் குறித்த ஊடகவியலாளரை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது தான் ஊடகவியலாளர் என்பதை அவர் உறுதிப்படுத்திய போதும் அந்த நபர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதுடன் கைத்தெலைபேசியினையும் பறித்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும் உள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போது இது போன்ற சம்பவங்கள் கொழும்பு போன்ற இடங்களில் அடிக்கடி நடக்கின்றது. அப்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதனை ஒரு பொருட்டாக ஏடுத்துக்கொள்ளவதில்லை. அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. என்று தெரிவித்திருந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் பொறுப்பற்ற பதிலையடுத்து அடுத்து மேற்படிச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவரின் புகைப்படத்துடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/85481.html
Geen opmerkingen:
Een reactie posten