[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 01:17.57 AM GMT ]
வட பகுதியிலிருந்து இராணுவத்தினரை நீக்குமாறு கமலேஷ் சர்மா கோரியிருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற யோசனையை தமிழ் அரசியல்வாதிகள், கமலேஷ் சர்மாவிடம் முன்வைத்துள்ளனர்.
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வட மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் குருகுலராசா ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக் கொள்வது ஆபத்தானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித நெகிழ்வுப் போக்கையும் காட்டாது என குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாணசபையும் முயற்சித்து வருகின்றமை குறித்த தகவல்கள், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkxy.html
விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டேன்: மஹிந்த சூளுரை
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 01:40.39 AM GMT ]
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருண்ட யுகமொன்றிலிருந்து நாட்டை மீட்டு அமைதியிலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுகையில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் சுதந்திரமாக செயற்படும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் எமது அரசாங்கமும் படையினரும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை.
2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது.
இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர்.
கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkxz.html
Geen opmerkingen:
Een reactie posten