தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

பொலிசாருக்கு எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன: யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்- சம்பிக்கவுக்கு பௌத்த அமைப்புகள் எச்சரிக்கை!

மலையகத்தில் துக்கம் அனுஸ்டிப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 09:35.29 AM GMT ]
பதுளை, ஹல்துமுல்ல, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மலையகத்தின் பிரதான நகரங்களில் துக்கம் அனுஸ்டிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களும், தோட்ட தொழிலாளிகளும் வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தி தமது துக்கத்தை வெளிப்படுத்தினர்.
துயர் பகிர்வும், இடர்களைவுக் கோரிக்கையும்- தமிழ் சிவில் சமூக அமையம்
கொஸ்லாந்த பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு தமிழ் சிவில் சமூக அமையத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இவ்வனர்த்ததினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்திலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்கிறோம்.
இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கியிருக்கும் மலையகத் தமிழ்ச் சமூகம் இரட்டை அடக்கு முறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகமாகும்.
உழைக்கும் வர்க்கமாகக் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்பட்டுள்ள இச் சமூகம், அதற்கு மேலதிகமாக கொடூரமான இன ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி வருகிறது.
சுதந்திர இலங்கையின் முதலாவது இன ஒடுக்கு முறை, பிரஜாவுரிமைச் சட்டம் எனும் வடிவத்தில் இவர்கள் மீதே பிரயோகிக்கப்பட்டது. காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களிலும் இவர்களின் உயிர்கள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப்பட்டன.
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகம் என்ற வகையில், மலையக மக்களின் துன்ப துயரங்களை நாங்கள் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்கிறோம்.
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையில், இவ்வியற்கை அனர்த்தம் ஒரு பேரவலத்தை விளைவித்துள்ளது.
இப்பேரவலத்திலிருந்து அவர்களது ஆன்மாவில் உறைந்துள்ள உறுதியினால் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. 
அதேவேளை மலையகத் தமிழ் சமூகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தினது பாராமுகத்தன்மையை இங்கு சுட்டிக்காட்டி இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி செய்ய வேண்டிய அரசாங்கத்தினது கடமையை வலியுறுத்த விரும்புகிறோம். இன்னும் மலையக தமிழ் அரசியல் சக்திகள் சுயநலம் தவிர்த்து தம்மக்களது உண்மையான மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எம்மைப் போலவே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து மலையகத் தமிழ் சமூகம் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது.
இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் வேண்டிக் கொள்கிறோம்.
முன்பும் இவ்வாறான வேளைகளில் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைத்து நடாத்திச் சென்ற பல்கலைக் கழக சமூகம், இம்முறையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்று, அவர்களுடன் எமது கரங்களையும் இணைத்துக் கொள்கிறோம்.
இப்பணியில் யாழ். பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் நாம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjp1.html
பொலிசாருக்கு எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன: யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்- சம்பிக்கவுக்கு பௌத்த அமைப்புகள் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 09:22.34 AM GMT ]
யாழ்.குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக கூறுவதில்லை. மாறாக பொலிஸார் குறைகளை கண்டறிந்து மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள்.
மாநகரசபை, வீதிகள், பாடசாலை எங்கே குற்றம் நடந்தாலும் பொலிஸாரையே குற்றம் சுமத்துகிறார்கள்.
சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும்.
மேலும் கலவரம் நடக்கும் இடத்தில் சிவில் உடையில் பொலிஸார் கடமயாற்றுவது பொதுவான விடயம். அந்த இடத்தில் பொலிஸார் மதுபோதையில் நின்றனர், வெற்றிலை பாக்கு போட்டனர் என கூறுவதில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ்.பிராந்தி பொலிஸ் எல்லைக்குள் 242 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குள் 67பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில், பாரிய குற்றங்கள் 6 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவை, 8 அனுமதியின்றி மது விற்பனை, 5 சந்தேகத்தின் பெயரில் ஆகியனவும் உள்ளடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்கவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பௌத்த அமைப்புகள்
தேசிய சக்திகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என பொதுபல சேனா மற்றும் பௌத்த புனர்ஜீவன ஆகிய அமைப்புகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன ஆகியோர் இணைந்து பல்தேசிய சக்திகளுக்கு தேசிய சக்திகளை அணித்திரட்ட வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் மற்றும் பௌத்த புனர்ஜீவன அமைப்பின் உறுப்பினர் மெதகம தம்மானந்த தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள பௌத்த சக்திகள் இணைந்து இன்றைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலை புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் கொள்கை வரைவுக்கான பொதுமக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்ள தேர்தலாக மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjp0.html

Geen opmerkingen:

Een reactie posten