[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 05:36.18 AM GMT ]
இன்று காலை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணியின் போது சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பபாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 818 பேர் இரண்டு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொஸ்லாந்த தமிழ் வித்தியாலயத்தில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேரும், பூணாகலை தமிழ் மாகா வித்தியாலயத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலை 7 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
500 இராணுவத்தினரும் பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை தற்பொழுது பாதிக்கப்பட்ட இடத்திலிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks7.html
தெமட்டகொடையில் நபர் ஒருவர் குத்திக் கொலை- ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்ட நபர் கைது
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 05:53.20 AM GMT ]
தெமட்டகொடை 65 இலக்க தோட்டத்தில் வசித்து வந்த 39 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கார் ஒன்றில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இன்று காலை குறித்த நபரை கூரிய ஆயுதத்தில் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் தெமட்டகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்ட நபர் கைது
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் என தன்னை கூறிக்கொண்டு பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு ஆலோசனை வழங்கி வந்த ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இரத்தோட்டை கைகாவல பிரதேசத்தில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை போல் பொலிசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டில் பேரில் இந்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்னரே அவர் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் போது அறிமுகமான சில குற்றவாளிகளை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எனக் கூறி தொலைபேசி அழைப்புகளை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkty.html
பதுளை கொஸ்லாந்த அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: யோகேஸ்வரன் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 06:27.35 AM GMT ]
அத்துடன் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவர்களது உறவுகளுக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அம் மக்களுக்கு அவசரமாக உதவும் முகமாக இயன்ற ஆதரவுகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எமது உறவுகள் பாதிக்கப்படும் போது விரைந்து உதவிக் கரம் நீட்டுவது எம் அனைவரினதும் கடமையாகும். ஆகவே எம்நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் வசிக்கும் எமது தமிழ் உறவுகள், அமைப்புக்கள், இந்து ஆலயங்கள் என்பன இம் மக்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவியை வழங்கும் முகமாக உதவி நல்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இது தொடர்பாக அவசர தொடர்பினை மேற்கொள்வதற்கு 0094776034559, 0094652228273, 0094652228018, 0094653656608 மற்றும் yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற தொடர்புகள் மூலம் தொடர்பு கொண்டு தங்களுடைய உதவிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
வங்கி தொடர்புகளுக்கு மட்டக்களப்பு கொமர்ஷியல் வங்கி, வங்கி இலக்கம் 1105040264, SWIFT CODE : CCEYLKLX, BANK CODE : 7056-105 : 7056-105
தொடர்புடைய செய்தி:
- பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
- மண் சரிவில் உயிர் தப்பியோரின் கண்ணீர்க் கதை! 300இற்கும் மேற்பட்டவர்கள் எங்கே?
http://www.tamilwin.com/show-RUmszAQUKXktz.html
ஒப்பந்தகாரர்களிடம் பகிரங்கமாக தரகு பணம் கேட்ட அமைச்சர்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 06:39.56 AM GMT ]
அமைச்சர் தனக்கு நெருக்கமான பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாக இந்த ஒப்பந்தகாரர்களை அழைத்து பேசியுள்ளார்.
எதிர்காலத்தில் தனக்கு 30 கோடி ரூபாவுக்கும் மேல் பணம் கிடைக்கும் எனவும் அதனை ஒப்பந்தகார்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் அதில் 5 வீதம் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 5 வீதத்தை தரகு பணமாக கொடுத்து விட்டால் தமக்கு இலாபம் கிடைக்காது என ஒப்பந்தகாரர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய போதிலும் அவர்களால் முடியாது போனால் வேறு ஒப்பந்தகாரர்களை தேடிப்பிடித்து அவர்களிடம் அதனை வழங்க போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பணத்தை தனக்காக கேட்கவில்லை எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு செலவிடவே கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் 5 வீதம் தரகு பணத்தை வழங்க ஒப்பந்தகாரர்கள் இணங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkt1.html
ஒரு வாரகால சோக அனுஸ்டிப்புக்கு மனோ அழைப்பு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 07:06.32 AM GMT ]
எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டு, கறுப்பு நிற உடை அணிந்து,இன்று வியாழக்கிழமை 30ம் திகதி முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஸ்டிப்போம். இந்த வேண்டுகோளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை, துன்பத்தில் வீழ்ந்தவர்களுக்கு உதவிட தயாராவோம். நமது மக்களை காவு கொண்ட இயற்கை, மீட்பு பணிகளையும் முன்னெடுக்க தடை போடுகிறது.
மீட்பு பணிகளிலே படைத்துறையினர் உட்பட இடர் நிவாரண பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெறவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறவும், அனாதரவானவர்கள் அடைக்கலம் பெறவும் எம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும், அனைத்து பேதங்களையும் புறந்தள்ளிவிட்டு வழங்க தயாராவோம்.
எமது உணர்வுகளை வெளிக்காட்ட எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ளை கொடிகளை பறக்க விட்டு, கறுப்பு நிற உடை அணிந்து இன்று வியாழக்கிழமை முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஸ்டிப்போம்.
அதேவேளை நிவாரண உதவிகள் பற்றிய தெளிவான கோரிக்கைகள் கிடைத்தவுடன், அந்த தேவைகளை வழங்க எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkt2.html
Geen opmerkingen:
Een reactie posten