[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 04:09.48 AM GMT ]
வரவு செலவுத்திட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அரசாங்கம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எங்கே அந்த பால்?
சம்பளம் மிகவும் சொற்ப அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுடன் இந்த சம்பள உயர்வினை ஒப்பீடு செய்ய முடியாது.
பொருட்களின் விலைகளை மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்றாடம் உணவு உட்கொள்ளக்கூட மக்களிடம் பணமில்லை.
வடக்கு கிழக்கு மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வடக்கு கிழக்கு வாழ் இடம்பெயர் மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks5.html
சிங்கள பேரினவாதத்தின் நாடாளுமன்றில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது: கூட்டமைப்பு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 05:19.55 AM GMT ]
ஆனால் நாடாளுமன்ற தெரிவுக்குழு போன்ற போலிகளை காண்பித்து தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்போவதான நாடகமும் நடக்கின்றது. சிங்கள பேரினவாத சக்திகள் நிறைந்திருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எமக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை.
அதனால் அதனை நாங்கள் விரும்பவில்லை என அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய மதிப்பீட்டாளர் மைக்கல் ஹில்மன் தலமையிலான குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவைசேனாதிராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றய தினம் யாழ்.மாவட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடமொன்றில் நடைபெற்ற மேற்படி சந்திபின் போதே கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேற்படி சந்திப்பு தொடர்பாக மாவைசேனாதிராசா மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, தமிழ் மக்கள் இந்தியாவில் மட்டும் 1லட்சத்து 70ஆயிரம் பேர் உள்ளார்கள், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 35வரையிலான குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த மக்களுடைய நிலங்களை படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். நிலத்திற்குச் சொந்தமான மக்கள் விவசாயம் செய்யவும், கடற்றொழில் செய்யவும் அனுமதியில்லை, ஆனால் படையினரும், அவர்களின் உதவியுடன் சிங்கள மீனவர்கள் மற்றும் சிங்கள விவசாயிகள் தமிழர் நிலங்களில் தொழில் செய்கின்றார்கள்.
இது தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார மூலவளத்தை சிதைக்கும் நோக்கமாகவும், தமிழ் மக்களின் இருப்பை சிதைக்கும் நோக்கமாகவுமே நாங்கள் பார்க்கின்றோம். இதனை விட வடக்கில் 70 தொடக்கம் 80வீதமான மக்களின் ஏகோபித்த தீர்மானத்தின் படி வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை முடக்கும் வகையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளும், படையினரின் செயற்பாடுகளும், ஆளுநரின் செயற்பாடுகளும் அமைகின்றன. எனவே இங்கே மக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்படவில்லை. இதனை விட 30வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணத்திற்கு எவ்விதமான விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படுவதில்லை.
இதேபோன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்றிருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். 2011ம் ஆண்டு நாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை 2012 ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்தினாலேயே கிழித்தெறியப்பட்டது.
இங்கே நீதித் துறை, தேர்தல் ஆணையகம் சுதந்திரமானதாக இல்லை. இந்நிலையில் நாங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை வழங்குவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினை அமைத்திருக்கின்றோம் அவர்கள் வரவில்லை என அரசாங்கம் ஒரு போலியான அமைப்பை உருவாக்கி நாடகமாடிக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறெனில் அரசாங்கம் எம்மோடு பேசி ஒரு தீர்வு திட்டத்தை, முன்மொழியட்டும், அதன் பின்னர் அது தொடர்பில் நாங்கள் பேசுவோம். சிங்கள பேரினவாத சக்திகள் நிறைந்திருக்கும் ஒரு இடத்தில் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை முழுமையாக முடக்கவே பார்க்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXks6.html
Geen opmerkingen:
Een reactie posten