தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

விடுதலைப் புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற வழக்கு! தலையிடாக் கொள்கையில் அரசாங்கம்?

பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 02:55.39 AM GMT ]
இலங்கைக்கான புனித பாப்பரசரின் விஜயம் ஜனவரியில் இடம்பெறவுள்ளமையால், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரையாவது பிற்போட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜனவரி 9ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து  இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வத்திக்கான் தகவல்களை மேற்கோள்காட்டி கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசரின் விஜயம் ஜனவரி 13 முதல் 15ஆம் திகதி இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளார்.
எனவே அவரின் விஜயத்துக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்ளமாறும் அவர் கத்தோலிக்க மக்களை கேட்டுள்ளார்.
இதேவேளை பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் விஜயத்துக்கு முன்னோடியாக வத்திக்கான் குழு ஒன்று நவம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு செல்லவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx5.html

மீரியபெத்த மண்சரிவு: 10 சடலங்கள் இல்லை! இதுவரையில் 3 சடலங்களே மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 03:59.56 AM GMT ]
கொஸ்லாந்த மீரியபெத்தவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மறுத்துள்ளது.
உரிய தகவல்களின்படி தற்போது 3 சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இராணுவம், பொலிஸ்,மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஆகியோர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு முரண்பட்ட தகவல்களை வழங்கி வந்தநிலையிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி மண்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே மூன்று சடலங்களும் மீட்கப்பட்டன.
நேற்று இரண்டாம் நாளின் போது எந்த சடலங்களும் மீட்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது: ஜே.வி.பி.
கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என ஜே.வி.பி கட்சி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளது.
பாதுகாப்பற்ற இடங்களில் வாழ்ந்து வரும் மக்கள் மீது குற்றம் சுமத்தாது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் உடனடியாக வேறும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும்.
மண்சரிவு இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் முன்கூட்டிய சோதனைகளின் மூலம் உயிர்ச் சேதங்களை வரையறுத்துக் கொண்டிருக்க முடியும்.
மீரியபெத்த பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.
பிரதேச அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்ததாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களின் மூலம் தெரியவருகின்றது.
இதன் மூலம் மண்சரிவு அழிவின் பொறுப்பினை பாதிக்கப்பட்ட மக்கள் மீதே சுமத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனினும் இவ்வாறு கூறுவதன் மூலம் அரசாங்கம் பொறுப்புக்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியாது.
குறித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாக குடியமர்த்தியிருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கடும் மழை மற்றும் தூர நோக்கற்ற மனித செயற்பாடுகளினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது.
மலையகத்தில் நீா்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும்,அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்
லக்ஷபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் நேற்று இரவிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
அத்தோடு காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியாகுவதோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
கொஸ்லாந்தை மீட்புப் பணிகளில் மோப்ப நாய்கள்
கொஸ்லாந்தை மண்சரிவில் உயிருடன் புதையுண்டவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கொஸ்லாந்தை, மீரியபெத்தை மண்சரிவுக்குள்ளான பிரதேசத்தில் மீட்புப் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
நேற்றைய தின மீட்புப் பணிகளின் போது கூடுதலான இயந்திரங்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டும் ஒரு சடலம் கூட மீட்கப்படவில்லை.
மீட்புப் பணிகளில் இராணுவத்தின் சுமார் 700 விசேட கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வான்படையின் விசேட எயார் மொபைல் பிரிகேட்டின் 52 விமானப்படை அதிகாரிகளும் மீட்புப் பணியில் துணை செய்கின்றனர்.
எனினும் எதிர்பார்த்தபடி சடலங்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் கிட்டவில்லை. இதனையடுத்து இன்று காலை முதல் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx7.html
விடுதலைப் புலிகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற வழக்கு! தலையிடாக் கொள்கையில் அரசாங்கம்?
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 05:26.02 AM GMT ]
விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவதில்லை என்று அரசாங்கம் கொள்கையளவில் முடிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் விசேட விளக்கவுரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் பற்றிய வழக்கில் தலையிடுவதில்லை என்று அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவில் இருந்தது.
மேலும் அந்த வழக்கில் அரசாங்கம் வாதி மற்றும் பிரதிவாதி தரப்புக்குள் வரவில்லை. எனவே வழக்கில் தொடர்புபடும் தேவை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் நடைபெற்ற குறித்த வழக்கில் இலங்கை அரசாங்கம் தன்னையும் மனுதாரர் தரப்பில் இணைத்துக் கொள்ள முயன்றிருந்தால், அது தொடர்பில் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் தாக்கல் செய்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையும் அதில் ஒரு தரப்புவாதியாக இணைத்து கொள்ளப்பட வேண்டுமாயின், ஐரோப்பிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க வேண்டும்.
அப்படி கோரிக்கை விடுத்திருந்தால், இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் நாடாக மாறும் என்பதால்,  இந்த வழக்கில் ஆஜராவதில்லை என்று இலங்கை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்தது.
மேற்குறித்த காரணங்களை சீர்தூக்கிப் பார்த்த அரசாங்கம் இந்த வழக்கில் தலையிடுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டிருந்தது என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjoy.html

Geen opmerkingen:

Een reactie posten