[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 11:31.36 AM GMT ]
கடந்த இரு தினங்களுக்கு முன் தம்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எதுவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
துறைமுக அதிகார சபையின் பாதுகாப்புப் பயிற்சிப் பாடசாலையில் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தம்மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில், சம்பந்தப்பட்ட எந்தவொரு நபரிடமும் இதுவரையில் ஒரு வாக்குமூலம் கூட பதிவு செய்யப்படவில்லையென ஆர். யோகராஜன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது தனது வாகனத்துக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தான் துறைமுக அதிகார சபையின் பாதுகாப்பு பயிற்சிப் பாடசாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றின் நிமித்தமே சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும், இவர்கள் தனது கடமையை நிறைவேற்றுவதில் அசண்டையீனம் காட்டுவது குறித்து அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னால் நிறுத்தி விசாரணை நடாத்த வேண்டும் எனவும் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu4.html
நளினி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 11:03.21 AM GMT ]
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தள்ளுபடி செய்யப்பட்டதாக அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்த வழக்கில், தண்டனை பெற்றுள்ள ஒருவரை சிறையிலிருந்து முன்விடுதலை செய்ய மாநில அரசுக்கு, மத்திய அரசின் அனுமதி தேவை என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தினை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்விடுதலை வழங்கியபோதிலும், தமது வழக்கில் மத்திய அரசிடம் அனுமதி கோருவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலூர் மகளிர் சிறப்பு சிறைச்சாலையில் 23 வருடங்களாக தாம் சிறைத்தண்டனை அனுபவித்துவருவதாகவும், நளினி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu3.html
Geen opmerkingen:
Een reactie posten