[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 01:38.00 PM GMT ]
இதில் விஞ்ஞானங்கள் பீடத்தின் வைத்திய மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கி அவர்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு நகர் வரையில் பேரணியும் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த விஞ்ஞான பீடத்தின் மாணவ தலைவர் கல்வி என்பது எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகின்ற ஒன்று அதனை தற்போது வியாபாரம் ஆக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் வைத்தியராகுவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும் பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும் பணத்தின் மூலம் வைத்தியராகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
எனவே இவ்வாறானதொரு திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அகில இலங்கை வைத்திய பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது அக்குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம் என்றார்.
வட கிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தில் சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், மட்டக்களப்பு நகர் வரையில் பேரணியும் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த விஞ்ஞான பீடத்தின் மாணவ தலைவர் கல்வி என்பது எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகின்ற ஒன்று அதனை தற்போது வியாபாரம் ஆக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் வைத்தியராகுவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும் பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும் பணத்தின் மூலம் வைத்தியராகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.
எனவே இவ்வாறானதொரு திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து அகில இலங்கை வைத்திய பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது அக்குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம் என்றார்.
யானை தாக்குதலுக்குரிய நஸ்ட ஈடுகள் மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது -பொன்.செல்வராசா எம்.பி.
கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தினை நேற்று முன்தினம் மாவட்ட செயலகத்துக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கடந்த ஆண்டு 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகத்துக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலகங்களுக்கு 80 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப்பணம் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்தப் பணமானது யானையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் குறித்த பணம் அனுப்பி வைக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் இது தொடர்பில் கடுமையான எமது ஆட்சேபனையினை தெரிவித்தேன்.
இதற்கு பதிலளித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த பணத்தினை தமது அமைச்சு கையாள்வதில்லையெனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலமே அந்த பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு குறித்த பணத்தினை உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கையெடுப்பதாகவும் அமைச்சின் செயலாளர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த பணம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
வட கிழக்கு மக்கள் சித்த அழகைத் தொலைத்து விடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்: விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 02:19.06 PM GMT ]
வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு வழங்கும் சித்தம் அழகியார் உலக உளநல நாளையொட்டிய சிறப்பு நிகழ்வு திருநெல்வேலி, யாழ் பல்கலைக்கழக வைத்திய பீடஹுவர் கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 தொடக்கம் – 12 மணிவரையில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையில்,
அழகிய சித்தத்தை உடையவர்கள் - சித்தம் அழகியார். நாம் யாவரும் பிறக்கும் போது எமது மனமானது இயற்கையிலேயே தூய்மையாக இருக்கும். சித்தம் அழகாக இருக்கும்.
ஆனால் நாளாக நாளாக சித்தமானது பல சமயங்களில் மலினப்படுகின்றது. பாதிக்கப்படுகின்றது. பரபரப்பில் ஆழ்கின்றது.
எமது வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.
இப்போது மேலெழுந்த வாரியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாகத் தெரிந்தாலும் எமது உண்மையான ஆரம்ப அழகிய சித்த நிலைக்கு நாம் யாவருந் திரும்பி விட்டோமா என்று கேட்டால் “இல்லை” என்றே பதிலிறுக்க வேண்டிய அவசியம் எம்மைச் சார்ந்துள்ளது.
உலக உளநல நாள் இம்மாதம் 10ந் திகதி கொண்டாடப்பட்டது. இப்பேர்ப்பட்ட ஒரு நாளானது உலக ரீதியாகக் கொண்டாடுவதின் நோக்கம் உலக உளநலம் பற்றிய பல விடயங்களை மக்கள் யாவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
அத்தோடு உளநலனை ஊக்குவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் நாம் யாவரும் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் ஆகும். இருபது நாள் கழித்து இந்நாளை நாங்கள் கொண்டாடினாலும் இப்பேர்ப்பட்ட கூட்டமானது உளநலனுடன் சம்பந்தப்பட்ட உயரிய நோக்கங் கொண்ட யாவரையும் ஒன்று சேர்த்து அவர்கள் இதுவரை செய்து வந்திருக்குஞ் சேவைகள் பற்றிப் பேசவும், இனிச்செய்ய வேண்டியன பற்றி ஆராயவும், செய்யாது விட்டால் என்ன நடக்கக் கூடும் என்பதை எல்லோருக்கும் எடுத்தியம்பவும் ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
உலக உளநல நாளானது முதன் முதலில் 1992ம் ஆண்டிலேயே 150 க்கு மேற்பட்ட நாடுகளால் கொண்டாடப்பட்டது. அப்பொழுதிலிருந்து உலகளாவிய ரீதியில் எமது சித்த அழகை ஆராயும் ஒரு நாளாக இந்நாள் இருந்து வருகின்றது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை ஒரு கருத்தினைச் சொல்லி விட்டுப் போயுள்ளார்.
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்: ஆறாது நாவினால் சுட்ட வடு” என்பதே அது.
ஒருவரை இன்னொருவர் தீயினால், சுட்டால் அந்த சுட்ட இடத்தில் வடு இருந்தாலும் மனத்தைப் பொறுத்த வரையில் அது மாறிவிடும். ஆனால் ஒருவரைக் குற்றஞ் சாட்டி கீழ்த்தரமாக ஏசி அவர் மனதில் பாதிப்பை எமது நாவினால் நாம் ஏற்படுத்தினோமானால் அதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு ஆறாது.
இவ்வாறான சுடு சொல்லினால் ஏற்படும் உளப் பாதிப்பை நாங்கள் உய்த்துணர்ந்து யாகாவாராயினும் நாம் நாகாக்க வேண்டும். அப்படி நாங்கள் காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.
அதாவது நாம் பேசும் போது எமது சொற்களை நிதானமாகப் பேச வேண்டும். அப்படி செய்யாது விட்டால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவார்கள் என்கிறார் மேலும் வள்ளுவர். அதாவது சுடு சொல்லானது மற்றவர்களைத் தாக்கும் என்பது மட்டுமல்ல அதனை வெளிக்கொண்டு வந்தவனையுந் தாக்கும்.
உளநலப் பாதுகாப்பு என்று கூறும் போது நாம் மற்றவர்களின் மனதில் ஏற்படுத்தும் வடுக்களை நாம் உணர வேண்டும். பல நடவடிக்கைகள் ஒருவகை உடல் ஊறினை ஏற்படுத்தினாலும் உடல் ஊனத்தை ஏற்பட வைத்தாலும், உடற் பாதிப்புடன், சூழற் பாதிப்பையும் இவைஏற்படுத்துவதால் மக்கள் மனநலம் குன்றி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அமுக்கப் படுகின்றார்கள்.
பல சிறைச்சாலைகளில் வாடி வதங்கி வாழும் எமது சகோதர, சகோதரிகள் இப்பேர்ப்பட்ட ஒரு பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால் சில சமயங்களில் அந்தப் பாதிப்புக்களையே ஒரு கவச ஆயுதமாக்கி மனப்பாதிப்பை வெளியே நிறுத்தக் கூடியவர்களும் உள்ளார்கள்.
விவேகானந்தனூர் சதீஸ் என்ற ஒரு சிறைக்கைதியை நான் வெலிக்கடை சிறைச் சாலையில் இவ்வருடம் தைப்பொங்கல் காலத்தில் சந்திக்க நேர்ந்தது.
சிறைச் சாலையில் இருந்து கொண்டே தனது மனக் குமுறல்களை கவிதை வாயிலாக வெளியிட்டுள்ளார். அவரின் பாதிப்புக்கள் அவரைப் பாதியாது தடுக்க அவர் கவிதையை நாடியுள்ளார்.
“இரும்புக் கதவுக்குள் இருந்து” என்ற தமது கவிதைத் தொகுப்பிலே அவர் கூறுகின்றார்-
நான் ஒரு அரசியல் கைதி – (என்)
மனைவி பிள்ளைகள் நிர்க்கதி
வன்னியில் (என்) உறவுகள் அகதி
பட்டினியில் மக்கள் அவதி என்று.
மேலும் கூறுகின்றார்.
“பல்லாயிரம் உயிர்கள் சமாதி
வானொலியில் கேட்பதோ செய்தி
அருகில் இல்லை அமைதி - இது
தமிழினத்தின் தலைவிதி” என்று.
இவ்வாறான கவிதைகள் மனித உள்ளத்தில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்பை எடுத்துக் காட்டுகின்றன. அதேவேளையில் அவற்றை வெளிக் கொண்டு வருவதால் பாதிப்புக்களைக் குறைக்க அவை உதவுகின்றன.
எனவே சூழலும் சுடு சொல்லும் எம்மை வடுக்களைச் சுமக்க வைப்பன என்பது உண்மையாகிலும் அவற்றின் பாதிப்புக்களில் இருந்து தப்பி வாழ வழிவகுக்கின்றன ஊரறிய வைக்கும் எமது உளநலம் பற்றிய உத்தமக் கருத்துக்கள்.
இன்று அபிவிருத்திக்கு வித்திடுவதும் உள நலமே என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டது. சமூக உளநலனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டிய ஒரு சூழலில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றும் எந்த அளவுக்கு எமக்குள் ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம் தீட்டப்பட்டு உள நலத்திற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும் என்பதும் ஆராயப்பட்டது.
பாதிக்கப்பட்டோருக்கு பொறுப்புணர்வோடு பலரும் எவ்வௌற்றைச் செய்ய முடியும் என்பவையும் ஆராயப்பட்டன. இவையாவற்றிலும் ஒரு முக்கிய தொடர் விடயம் நிறைந்துள்ளது.
அதுதான் இதுவரை பூட்டி வைத்துப் பேசிவந்த மனநிலைப் பாதிப்புக்களை நாம் வெளிக் கொண்டு வந்து வெளிப்படையாகப் பேசுவதால் ஏற்படும் நன்மைகள்.
யுத்த காலத்தின் போது சுனாமி எம் பிரதேசத்தைப் பாதித்தது. அப்போது சுனாமியின் பின்னரான சில காலத்திற்குப் போரில் உக்கிரமாகப் போரிட்ட இரு தரப்பாரும் மனித அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் ஒழுகிப் பாதிக்கப்பட்ட பலபேருக்கு அன்பையும் அனுசரணையையும் வழங்கினார்கள்.
ஓரிரு வாரங்களின் பின்னர் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டது. ஒருவரையொருவர் கொல்ல எத்தனித்தார்கள் எதிரெதிராக நின்றிருந்தோர்.
ஆனால் இன்று நாம் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். எம் மக்களின் நலம் காண வேண்டிய ஒரு கடப்பாடு எம் எல்லோரையும் பீடித்துள்ளது.
மனதில் மாண்புடைய மனித நேயம் மலர வேண்டிய ஒரு மாபெரும் கடப்பாடு எம் மக்களைச் சார்ந்துள்ளது. எம் மனதில் அன்பு மலர்ந்தால்தான் மற்றவர்கள் வாழ்வில் நாங்கள் அரவணைப்பை அரும்ப வைக்கலாம்.
எம்மனதில் காமம், குரோதம், மதம், மாச்சரியம், போட்டி, பகைமை, பேராசை, செருக்கு போன்ற குணங்கள் குடி கொண்டிருந்தால் அன்பு வெளிவராது. எவ்வாறு பிறக்கும் போது யாவரும் அழகிய சித்தத்துடன் பிறக்கின்றோமோ அதேபோல் எல்லோர் அடி மனதிலும் அன்பு என்ற அடிப்படை அழகு குடிகொண்டுள்ளது.
அதனை வெளிக்கொண்டு வருவதற்கு பல எதிர்மறையான குணாதிசயங்கள் எங்களுக்குத் தடையாக உள்ளன. அவற்றை வெளிக் கொண்டு வருவதானால் அதற்கு எமது அறிவு வளர வேண்டும். எமது குறைபாடுகள் எமக்குப் புரிய வேண்டும். எம்மை நாமே சுய விமர்சனத்திற்கு உட்படுத்த ஆயத்தமாக வேண்டும்.
இதை வெளிக்கொண்டுவர ஒரு உதாரணத்தைத் தருகின்றேன்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பயங்கரமான வழிப்பறிக் கொள்ளைக் காரன் இருந்தான். காட்டின் ஊடாகப் போவோர் வருவோரையெல்லாம் துன்புறுத்தி அவர்களிடம் இருந்து பலதையும் கொள்ளை அடித்து அந்தக் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மூலமாகத் தன் குடும்பத்தாரை நல்ல நிலையில் வைத்து வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ஏழு ரிஷிகள் காட்டினூடு சென்றார்கள். சப்தரிஷிகள் அவர்கள். அவர்களை நிறுத்தி அவர்களின் பொருட்களைக் கேட்டான் இந்தக் கொள்ளைக்காரன். அவர்கள் சிரித்து விட்டு “எங்களிடம் ஏதப்பா காசு, பணம், செல்வம் என்பன?” என்றார்கள்.
அதே நேரம் அவர்கள் கேட்டார்கள் “நீ இந்தப் பாவச் செயலை ஏன் செய்து வருகின்றாய் மக்கள் மனம் நோக இவ்வாறு கொள்ளை அடிப்பது பாவமல்லவா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் “என் மனைவி பிள்ளைகளை நான் காப்பாற்ற வேண்டாமா?” என்று பதிலுக்குக் கேட்டான். “உன் பணத்தில் பங்கெடுப்பவர்கள் உன் பாவத்திலும் பங்கெடுப்பார்களா?” என்று கேட்டார்கள் அந்த சப்தரிஷிகள். “நிச்சயமாக” என்றான் கொள்ளைக்காரன்.
“அவர்களிடம் கேட்டுள்ளாயா?” “கேட்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குத் தெரியும் நான் செய்யும் காரியங்கள் எல்லாமே அவர்கள் நலத்திற்காக என்று” என்றான் கொள்ளைக்காரன்.
“கேட்டு வருவாயா?” கேட்டார்கள் ரிஷிகள். “போகாதீர்கள்! இங்கிருங்கள் போய்க் கேட்டு வருவேன்” என்று கூறி விட்டு மனைவி, பிள்ளைகளிடம் போய் “நான் செய்யும் கொள்ளைத் தொழில் பாவமாம், அதற்குத் தண்டனை கிடைக்குமாம்.
ரிஷிகள் சொல்கின்றார்கள். அந்தப் பாவத்தில் பங்குபற்ற நீங்கள் ஆயத்தம் தானே?” மனைவியும் பிள்ளைகளும் யோசித்து விட்டுக் கூறினார்கள் -“நீங்கள் எங்களைப் பராமரிப்பது உங்கள் கடமை. நீங்கள் எவ்வாறு எதனைச் செய்து சம்பாதிக்கின்றீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை.
தருவதை வாங்கி நாம் தரத்துடன் வாழ்கின்றோம். உங்கள் பாவத்தை நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்?” இதைக் கேட்ட கொள்ளைக்காரன் திடுக்குற்றான்.
நடந்ததைச் சென்று ரிஷிகளுக்குக் கூறினேன். தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் என்னவென்று கேட்டான். ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி அவ்விடத்தில் இருந்து முன்னால் இருந்த மரத்தை “மரா மரா” என்று அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
“நாம் திரும்பி வரும் வரையில் இருப்பாயா?” என்று கேட்டார்கள். “இருப்பேன்” என்றான். அவர்கள் சென்று விட்டார்கள். கொள்ளைக்காரன் இருந்த இடத்தில் இருந்து “மரா மரா” என்று செபித்துக் கொண்டிருந்தான். “மரா மரா” என்றது “ராம ராம” என்றானது.
கொள்ளைக்காரனைச் சுற்றிக் கறையான்கள் புற்றெடுத்தன. ஏழு வருடங்கள் கழித்து சப்தரிஷிகள் அவ்விடத்தால் சென்ற போது கறையான் புற்றினுள் இருந்து பிரகாசமான வெளிச்சமொன்று தெரிந்தது.
புற்றை உடைத்த போது பிரகாசமான முகத்துடன் கொள்ளைக்காரன் தியானத்தில் வீற்றிருந்தான். அந்தக் கொள்ளைக்காரன் தான் இராமாயண காவியத்தை உலகத்திற்கு ஈந்த வால்மீகி மகரிஷி. கறையான் புற்றினுள் இருந்து வெளிவந்ததால் வால்மீகி என்ற நாமத்தைப் பெற்றார்.
எமது குறைபாடுகளை நாம் முகத்திற்கு முகம் ஏற்று அதுபற்றிய சுயவிமர்சனத்தை வளர்த்து அவற்றை அகற்ற நாம் ஆவன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைகின்றது வால்மீகி என்ற அந்தத் தெய்வ மனிதரின் வாழ்க்கை.
அன்பு என்பது எம் எல்லோர் மனதிலும் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. அறிவு தான் அதனை வெளிக் கொண்டு வர உதவும். அப்பேர்ப்பட்ட அறிவை நாம் பெற வைப்பதற்காகவே இன்று இந்த உலக உளநல நாளையொட்டிய சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சுய விமர்சனம் பற்றிக் கூறும் போது அண்மையில் என் மேல் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்கு இத் தருணத்தில் பதில் இறுத்தால் என்ன என்று தோன்றுகின்றது.
காலஞ்சென்ற உலகதத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பேச்சுக்களில் உதாரணங்களையோ மேற்கோள்களையோ கையாள்வதில்லை.
ஏனென்று கேட்டதற்கு கேட்பவர்கள் உதாரணங்களிலும் மேற்கோள்களிலும் தமது மனதை இலயிக்கப் பண்ணித் தான் கூறும் முக்கியமான தத்துவக் கருத்துக்களைக் கோட்டை விட்டு விடுவார்கள் என்றார்.
இதை அறிந்திருந்தும் 10 வருடங்கள் வரையில் சட்ட விரிவுரையாளனாக நான் கடமையாற்றிய காலத்தில் உதாரணங்கள் பலவற்றை என் விரிவுரைகளில் உட்புகுத்தினேன்.
என் மாணவ மாணவியரும் அவற்றின் உதவியைக் கொண்டு நான் கூற வந்த சட்ட சம்பந்தமான விடயத்தைக் கிரகித்துக் கொண்டு பரீட்சைகளில் நன்றாக எழுதிச் சித்தியும் அடைந்தார்கள்.
ஆனால் அண்மையில் நான் கூறிய ஒரு மேற்கோள் என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டது. பெண்ணியலாளர்கள் என்னைப் பின்னி எடுத்து விட்டார்கள்.
ஆணுக்கும் பொருந்தும் ஒரு கருத்தை பெண்ணை முன் வைத்துப் பேசியது எவ்வளவு தவறு என்று கூறி என்னை அவ்வாறு அவர்கள் வைத போது தான் உலகப் பேரறிஞர் தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்று கூறிய அவரின் கருத்தின் பெறுமதி எனக்குப் புரிந்தது.
ஏதோ ஒரு கருத்தை நான் முன்வைத்து அதனை வலியுறுத்த எடுத்த ஒரு மேற்கோள் என்னை ஆபத்தில் மாட்டி விட்டது. மேற்கோள் மேற்கோளுடன் நிற்க வேண்டும். கூறிய கருத்தே முக்கியம்.
மேற்கோளின் ஊடாக நான் கூறிய கருத்தை அடைந்து விட்டீர்களானால் கரடி துரத்தி வரக் கூரையில் ஏறிய பின் ஏணியைத் தட்டி விடுவது போல் மேற்கோளைத் தட்டி விடுங்கள். அது முக்கியமல்ல. சொல்ல வந்த எனது கருத்துத் தான் முக்கியம் என்று கூறமுடியாது தவித்திருந்த எனக்கு அதனைக் கூறுவதற்குக் களம் அமைத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி கூறுகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkv3.html

Geen opmerkingen:
Een reactie posten