தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் இலங்கை அகதிகள்: ஆய்வில் தகவல்!

காணாமல்போனவரின் மனைவிக்கு மிரட்டல்! முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 05:06.06 PM GMT ]
வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தின் தலைவியாக முன்னர் செயற்பட்ட எஸ்.பாலேஸ்வரி என்பவருக்கு இனந்தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, கிடாச்சூரி பகுதியில் வசித்து வரும் இவருக்கு நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் எஸ்.பாலேஸ்வரி தெரிவிக்கையில்,
நேற்று இரவு எனது வீட்டுக்கு இரண்டு கறுப்பு மோட்டர் சைக்கிளில் வந்த நால்வர் என்னை வெளியில் வருமாறு அழைத்தனர்.
அப்போது எனது சகோதரி லைற்றைப் பிடித்து யார் நீங்கள், ஏன் அவாவை கேட்கிறீர்கள் என வினாவினார். அதற்கு பதிலளிக்காது என்னை கூப்பிடுமாறு தொடர்ந்து கடுந்தொனியில் மிரட்டினர்.
அப்போது யார் என்று பார்ப்பதற்காக அவர்களின் முகத்திற்கு லைற்றை பிடிக்க அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதன்பின் இன்று இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது மிரட்டியவர்கள் யார் என தெரியாது. எனவே முறைப்பாடு செய்ய முடியாது என பொலிஸார் திருப்பிவிட்டனர் என தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பெண்ணின் கணவர் காணாமல்போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlr2.html
அமைச்சர்களுக்கு சகல வசதிகளையும் கொடுத்துள்ளது! பிரதியமைச்சர் முதுஹெட்டிகம
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 05:08.58 PM GMT ]
தற்போதைய அரசாங்கம் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு உயரிய வசதிகள் அனைத்தும் கிடைத்துள்ளது. உலகில் வேறு எங்குமே இதுபோன்ற வசதிகளை காண முடியாது.
உண்மையைச் சொல்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்தில் தான் அமைச்சர்களுக்கு இந்தளவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அப்படியிருக்க எந்தவொரு அமைச்சரும் ஜனாதிபதிக்கு எதிராக கட்சி தாவ நினைக்கவே மாட்டார்கள். அவ்வாறான வதந்திகள் பொய்யானவை என்றும் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlr3.html
அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: அத்துரலியே ரத்தன
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 12:30.56 AM GMT ]
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தமது கட்சி இன்னனும் முடிவெடுக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நேற்றிரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு வரவேண்டும் என்பதே தமது கட்சியின் நோக்கமாகும்.
இதன்படி தாம் அரசாங்கத்தின் பிழைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டியதாகவும் ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
19வது அரசியல் அமைப்பு தொடர்பில் அரசாங்கம் செயற்படுவதற்கு இன்னனும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே நேற்றைய சந்திப்புக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரர் நேற்றைய சந்திப்பு தீர்க்கமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlr6.html
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 12:38.38 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டை இல்லாத அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக அறிவிக்குமாறு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவித்துள்ளேன்.
பெருந்தோட்டப் பகுதிகளில் நடமாடும் சேவைகளின் ஊடாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
ஒன்பது லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது என சில தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
எவ்வாறான தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை இல்லாத ஒன்பது லட்சம் பேர் இருப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இவ்வாறு தேசிய அடையாள அட்டைகள் இன்றி இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlr7.html
ஆளும் கட்சியில் நுழைந்து கொண்டவர்கள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்: காணி அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 12:53.47 AM GMT ]
ஆளும் கட்சியில் நுழைந்து கொண்ட சிலர், தமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளப் போவதாக போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஆளும் கட்சிக்கள் புகுந்து கொண்டவர்கள் பதவி மற்றும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எனக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
யார் என்ன சொன்னாலும், எவ்வாறான சூழ்ச்சிப் பொறிகளை வைத்தாலும் தென்னக்கோன்கள் எந்தக் காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார கோட்டையாக காணப்பட்ட மாத்தளை மாவட்டத்தை சுதந்திரக் கட்சியின் அதிகார கோட்டையாக மாற்றியமை பெருமை தென்னக்கோன்களையே சாரும்.
தென்னக்கோன்கள் யார் என்பது சுதந்திரக் கட்சியின் மக்களுக்கு தெரியும். எனினும் பதவிகளுக்காக அண்மையில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு இந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வேறு செய்வதறியாது எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர் என சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஜனக பண்டார தென்னக்கோன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlsz.html
இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் இலங்கை அகதிகள்: ஆய்வில் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 01:04.18 AM GMT ]
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
டிஐஎஸ்எஸ் என்ற மும்பாயில் உள்ள சமூக தரவுகள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில் தொடர்ந்தும் இருப்பதையே விரும்புகின்றனர்.
சுமார் 520 குடும்பங்களில் 23 சதவீதமான குடும்பங்களே இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளன.
மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே மீண்டும் திரும்பும் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். அதிலும் 42 வீதமானோர் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் அனுசரணையில் திரும்ப விரும்புகின்றனர். 4 சதவீதத்தினர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். ஏனையவர் முகாம்களுக்கு வெளியில் தங்கியுள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmszARcKXls0.html

Geen opmerkingen:

Een reactie posten