[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 03:43.45 PM GMT ]
குச்சவெளி, ஜாயா நகர் அல்மஸ்ஜிதுர் ரஹ்மானியாவின் மதகுரு அப்துல் சலாம் அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரமொன்றில் தன்னைக் கட்டிவைத்துக் கொண்டுள்ளார். இதற்காக அவர் பாடசாலை மாணவன் ஒருவரின் உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளிலிருந்து தப்புவதற்காகவே அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மதகுரு காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் அவர் பாடசாலை மாணவன் ஒருவருடன் கையில் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு காட்டுப்பக்கமாக சென்றதை புலனாய்வாளர் ஒருவர் தற்செயலாக கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பாடசாலை மாணவனிடம் மேற்கொண்ட விசாரணகளின்போது மதகுரு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது குறித்த மதகுரு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkrz.html
ஐ.தே.க.ஆட்சிக்கு வந்தவுடன் பொன்சேகாவுக்கு நியாயம் வழங்கப்படும்! கரு ஜயசூரிய
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 04:37.37 PM GMT ]
நேற்று கொழும்பில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பொன்சேகாவுக்கு ஏராளம் அநியாயங்களைச் செய்துள்ளது. அவரது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டே நாளில் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும். அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் திருப்பியளிக்கப்படும்.
நாட்டிற்கு பெரும் ஆபத்தாக இருந்த பயங்கரவாதத்தை முறியடித்தவர் சரத் பொன்சேகா. அவருக்கு அதற்கான சகல மரியாதைகளும், கௌரவமும் வழங்கப்படும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. எம்.பி.க்கள் மீதான தாக்குதல்! நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்
ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க சபாநாயகரிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுக அதிகார சபையின் பயிற்சி நிறுவனத்திற்கு சோதனை நடவடிக்கைக்காகவே சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும்.
அதே நேரம் துறைமுக அதிகார சபை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜனின் வாகனம் சம்பவத்தில் கடுமையாக சேதமுற்றுள்ளது.
எனவே இந்தத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள கொம்பனித்தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியையும் வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜோன் அமரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkr0.html
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் வெள்ளி! மஹிந்தவுக்கு ஆதரவு? (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 02:35.45 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தின் போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கட்சியன் ஊடக ஆலோசகர் ஏ.ஆர்.எம். ஹபீஸ்,
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு கிடைத்த நன்மைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது எடுத்துரைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிச் சக்திகள் அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசிற்குமான உறவை சீர்குலைக்க முயற்சித்தபோதும் இருதரப்பும் அதனை ஆரோக்கியமான வகையில் பேணி வந்திருப்பதாகவும் டொக்டர் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்களை லங்காபுவத் செய்திச் சேவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளது.
அவரது கருத்துக்களை லங்காபுவத் செய்திச் சேவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளது.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை மஹிந்தவிற்கு வழங்குவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் லங்கா புவத் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஹெல உறுமய- ஆளுங்கட்சி பேச்சுவார்த்தை திங்கள் வரை தொடரும்
ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டுமன்றி இன்று மாலையும் இரு தரப்பு பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் அலரி மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிக்கிறது. எதிர்வரும் திங்கள் வரை தினமும் மாலையில் பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமது பிரேரணைகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தபட்ட பின்னரே இறுதி முடிவை எடுக்க முடியும் என்று ஆளுங்கட்சி தெரிவித்துள்ளதாக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டமாக கடந்த திங்கட்கிழமை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அலரிமாளிகைக்கு வருகை தந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூர்த்தி நிவாரணம் ரத்து! கைக்குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி
சமூர்த்தி நிவாரணம் ரத்துச் செய்யப்பட்ட மனவேதனையில் தாயொருவர் தனது இரண்டு கைக்குழந்தையுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இன்று காலை வேயாங்கொடை ரயில் நிலையம் அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த பெண் தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் வெகு சமீபமாக வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.
அவ்வழியால் சென்ற பொதுமக்கள் இதனைக் கண்டு உடனடியாக குழந்தையையும், அந்தப் பெண்ணையும் இழுத்து ரயிலில் அடிபடாமல் பாதுகாத்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் தாயையும், குழந்தையையும் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq7.html
Geen opmerkingen:
Een reactie posten