தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

கொஸ்லாந்தைக்கு இராணுவத்தளபதி விஜயம்! உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

அப்பாவி அமைச்சரும் அடாவடி! மறுக்கிறார் ரெஜினோல்ட் குரே
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 03:57.14 PM GMT ]
அமைச்சர் ரெஜினோல்ட் குரே தன்னைத் தாக்கியதாக பாணந்துறை பிரதேச சபை தலைவரின் சாரதி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று மாலை பாணந்துறை நகர மத்தியில் வைத்து பாணந்துறை பிரதேச சபைத் தலைவரின் சாரதி வசந்த, அமைச்சர் ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அமைச்சருடன் கூட இருந்த பாதுகாவலர்களும் வசந்தவை அடித்து, துவம்சம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வசந்த, அமைச்சர் ரெஜினோல்ட் குரே மற்றும் அவரது பாதுகாவலர்கள் தன்னைத் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் போகும் பாதையில் எதிர்ப்பட்ட வசந்தவை மெதுவாகச் செல்லுமாறு கையில் சாதாரணமாக தட்டிவிட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் மேற்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உள்ள அடாவடி இல்லா அப்பாவி அமைச்சர்கள் வரிசையில், ராஜித சேனாரத்ன போன்றே ரெஜினோல்ட் குரேயும் நல்ல பெயரைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr4.html


கொஸ்லாந்தைக்கு இராணுவத்தளபதி விஜயம்! உலர் உணவுப் பொதிகள் விநியோகம்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 04:14.16 PM GMT ]
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று கொஸ்லாந்தை மண் சரிவுக்குட்பட்ட பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அவருடன் கமாண்டோ படையணியின் கட்டளைத் தளபதி, மத்திய மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர்.
மண்சரிவுக்குள்ளான இடத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை பார்வையிட்ட இராணுவத் தளபதி, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தின் சார்பில் உலர் உணவுப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார்.
இதற்கிடையே இன்று மாலை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மண்திட்டொன்றுக்கு அடியில் சிக்கியிருந்த சடலம் ஒன்றை மீட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr5.html

Geen opmerkingen:

Een reactie posten