தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

யுத்தத்தால் சிதைந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்: கிளிநொச்சியில் அருட்தந்தை யோசுவா



இளைஞனின் உயிரைப் பறித்த காதல்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 08:41.43 AM GMT ]
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹென்போல்ட் பிரிவுக்குட்பட்ட வாழைமலை தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைமலை தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெயராம் மோகன்ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படுவதோடு பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞரின் தந்தை கொழும்பில் வேலை செய்வதோடு தாய் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் நாளை அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் பிரச்சினையே தற்கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணையில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt6.html

யுத்தத்தால் சிதைந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்: கிளிநொச்சியில் அருட்தந்தை யோசுவா
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 09:03.35 AM GMT ]
கிளிநொச்சியில் மதங்களிடையே சுமூகமான உறவு நிலவுகிறது. ஆனால் எமக்குள்ள முக்கிய சவால் யுத்தத்தால் சிதைந்துபோன சமுகத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்.
இவ்வாறு சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் கிளிநொச்சி மாவட்ட பேரவையின் பொருளாளரான வண.பிதா கலாநிதி. யோசுவா அடிகளார் தெரிவித்துள்ளார்.
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் கிளிநொச்சி மாவட்ட பேரவையுடனான அம்பாறை மாவட்டக் கிளையினரின் சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பு பேரவையின் மாவட்டத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சர்வமத பிரதிநிதிகளான திருமதி செல்வராணி சோமசுந்தரம்பிள்ளை, செயலாளர் கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல், செயலாளர் வி.ரி.சகாதேவராஜா, உபதலைவர்களான வண.ரண்முத்துக்கல சங்கரத்னதேரர், பாஸ்ரர் கிருபைராஜா, பொருளாளர் பாஸ்ரர் எஸ்.கிறிஸ்தோபர், உபசெயலாளர் ஜ.எம்.இப்றாகிம், நிருவாக சபை உறுப்பினர்களான எம்.எஸ்.ஜலீல், அஸ்ஸேய்க், எவ்.எம்.அன்சார், மௌலானா, த.கயிலாயபிள்ளை, எம்.ஜ.ஹிமாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு அருட்தந்தை யோசுவா அடிகளார் மேலும் கருத்துரைக்கையில்,
வறுமையைக் காரணங்காட்டி சில கிறிஸ்தவ சபைகள் உதவி செய்வது மாதிரி செய்து மதம் மாற்றுகிறார்கள். யுத்தத்தினால் தாய், தந்தையரை இழந்த அல்லது கணவரை இழந்த விதவைகளுக்கு உதவுவதுபோன்று நடந்து மதம் மாற்றுவதை காண்கிறோம்.
இம்மதமாற்றத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த ஒரு பைபிளிலும் ஏனைய மதத்தினரை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றுமாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் படித்த பைபிளில் அப்படி இல்லை.
இந்து சமத்தில் சமய அறிவு இல்லாதவர்களும் பற்றும் இல்லாதவர்களே இவ்விதம் மாற்றப்படுவதற்கு பலியாகிறார்கள். அதற்காகத்தான் இந்துக்கள் வாழுகின்ற இடங்களில் குறைந்தபட்சம் அறநெறி வகுப்புக்களை கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும். பிரதேசத்திற்குப் பிரதேசம் இது வித்தியாசம்.
மதமுரண்பாடுகள் வளர இடமளிக்கக்கூடாது. மாணவர் மத்தியில் சகல சமயங்களையும் பற்றிய அடிப்படை அறிவுகளை வழங்க எமது பேரவையினர் முயற்சிக்க வேண்டும்.
அதற்காக நாம் நாடகம் ஓவியங்கள் ஊடாக பயிற்சிப்பட்டறைகளை வழங்கி விழிபபுணர்வூட்டி வருகின்றோம். வீதி நாடகம் அரங்கசெயற்பாடாக மாற்றி வருகிறோம். நான் நாடகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவன். 42 தொழில் ரீதியான நடிகர்களை உருவாக்கியுள்ளேன்.
யுத்தததால் பாதிக்கப்பட்ட மனிதனின் உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் எமது முக்கிய நோக்கமாவுள்ளது.
அன்று இவ்வீதி நாடகமுறைமை விடுதலைப்புலிகள் ஆட்களைச் சேர்ப்பதற்குக்கூட பயன்படுத்தினார்கள். அந்தளவிற்கு வீதி நாடகம் அன்று மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது.
ஆனால் இன்று அது அரங்கச் செயற்பாடாக மாறியுள்ளது. அதாவது நாடகத்தை வீதியில் நடிக்காமல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடத்தில் அவர்களுடைய கதைகளை உள்வாங்கி அதற்கேற்ப நடித்து தீர்வை வழங்குவது இன்றைய முறையாகும்.
இதன்மூலம் மக்களுடைய பிரச்சினைகளை அரங்கியல் நாடகம் மூலமாக தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
தமிழ் சமூகத்தில் விதவைகள் பற்றிய பார்வை கண்ணோட்டம் சற்று வித்தியாசமானது. எனவே விதவைகளிடையே வாழ்வியல் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பும் வண்ணம் அரங்கியல் செயற்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
விதவையும் சமுகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அங்கம்தான் என்பதை உணரச்செய்தலே அதன் நோக்கமாகும்.
2015 முன்மொழிவுகளிலே அறநெறிப் பாடசாலைகளை சரியாக கிராம மட்டத்தில் உருவாக்கி மத நம்பிக்கைகளை கட்டியெழுப்புதல். விதவைகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்தல் தென்னை மரத்தை நடச்செய்வதுடன் இடையே ஊடுபயிர்களை வளர்க்கவும் ஊக்குவித்தல் என்பனவாகும்.
இதனூடாக வாழ்வியலில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.
வடக்கில் 2 வகையான காணிப் பயன்பாடு சமகாலத்தில் ஏற்படுத்தப்படுகிறது. இராணுவப் பயன்பாட்டிற்கு காணியைக் கையகப்படுத்தல். அடுத்தது சமுகக் குடியேற்றத்திற்கு பயன்படுத்தல்.
வடக்கிலும் யாழ்ப்பாணத்தைப் பொறுததவரை காணி என்ற கதைக்கே இடமில்லை. அங்கு காணிகள் சும்மா இல்லை. வலிகாமம் வடக்கில் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அங்கு காணிகள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் வசமுள்ளது.
ஆனால் கிளிநொச்சியைப் பொறுத்தவரை காணிகள் நிறைய உள்ளன. ஆனால் பரவிப்பாஞ்சான் எனுமிடத்தில் இராணுவத்தினர் உள்ளனர். அங்கிருந்த மக்கள் வெளியேறி அரசகாணிகளில் குடியேறியுள்ளனர். இங்கு நிறைய காணிகளிருந்தன.
கிளிநொச்சியில் முஸ்லிம்கள் ஏலவே இல்லை. ஆனால் முல்லைத்தீவில் ஏலவே முஸ்லிம்களிருந்தனர். அவர்கள் தற்சமயம் மீளவந்து கொண்டிருக்கின்றனர். அன்று கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் புத்தளத்தில் குடியேறினர். சிலர் அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். பலர் நாச்சிக்குடா திருவையாறு போன்ற இடங்களுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
திருமதி செல்வராணி சோமசுந்தரம்பிள்ளை கூறுகையில்,
மதம் என்பது வாழும் நெறிமுறை. எனவே அவரவர் வாழும் நல்ல நெறிமுறையை அந்தந்த மதம் காட்டுகிறது. எனவே யாரும் குரோதமனப்பான்மையுடன் இயங்க வேண்டியதில்லை.
மது மாதுக்களால் சமூகச் சீரழிவு தலைவிரித்தாடுகிறது. சமய அறிவுள்ளவர்கள் இவறறில் ஈடுபடமாட்டார்கள. எனவே அறநெறி வகுப்புகள் குழந்தைகளுக்கு முக்கியம். திருநகரில் 80 விதவைகள் உள்ளனர். அவர்களது 25 பிள்ளைகளை எமது பேரவை எடுத்து பயிற்சியளித்து வருகிறது.
பொருளாதார ரீதியாக நிறைவு காண்பதற்கு சமயம் வழிகாட்ட வேண்டும். பசியோடிருப்பவனுக்கு சமயப் போதனை சரிவராது. முதலில் அவனது பசியைப் போக்க வேண்டும்.
பரவிப்பாஞ்சானில் 06 பெண்களுள்ள ஒரு குடும்பமிருந்தது. அவர்களது காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. எவ்வளவோ எடுத்துக்கூறியும் இராணுவம் விடவில்லை. இன்று புலிகள் இல்லையென்றால் இவ்விதம் குடும்பங்களுள்ள காணிகளை பிடிப்பது சரியா?
தர்மபுரம், உடையார்கட்டு போன்ற பகுதிகளில் பிரச்சினையே இல்லை. எவ்வளவோ காணிகளுண்டு. அங்கு இராணுவம் முகாம் அமைக்கலாம். மக்கள் வாழுகின்ற இடத்தில் குடியேறுவது அவசியமா?
மக்கள் எல்லாம் நல்லவர்கள்.ஆனால் சில சுயநல அரசியல்வாதிகளால்தான் மக்கள் பிரிக்கப்படுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt7.html

Geen opmerkingen:

Een reactie posten