முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட கொக்கிளாய் கடல்நீரேரியில் தடை செய்யப்பட்ட புறவலை மற்றும் கரை வலைகளைப் பயன்படுத்தி தென் பகுதியில் இருந்து புதிதாக குடியேறிய சிங்கள மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டுவருவதனால் அப்பகுதியில் காலம் காலமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழ் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடல் நீரேரியை நம்பி வாழும் சுமார் 650 மேற்பட்ட மீனவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கடல் நீரேரியில் தங்கூசி வலை,இழுவை வலை என்பன தடை செய்யப்பட்டிருந்த போதிலும் சிங்கள மீனவர்கள் இந்த வலைகளை பயன்படுத்தி அத்துமீறி மீன் பிடி தொழில் செய்கின்றனர்.
இது சம்பந்தமாக இப்பிரதேச மக்கள் கடல் தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், மீனவர் சங்கங்களிடம் மற்றும் பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்தும் இவர்கள் இந்த மீனவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருப்பதாகவும் இந்த மக்களின் கோரிக்கைகளை கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlx4.html
Geen opmerkingen:
Een reactie posten