தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

பாப்பரசரின் விஜயத்தை தடுத்து நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் மகிந்த!

தேர்தல் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 08:14.31 AM GMT ]
இலங்கை தேர்தல் திணைக்களத்தின் அதிகாரமிக்க உயர் அதிகாரி ஒருவருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய பேச்சு வார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தாமரை தடாகம் மகிந்த ராஜபக்ஷ அரங்கில் உள்ள இரகசியமான அறையில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் ஆகியோருடன் இந்த இரகசியமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த இரகசிய பேச்சுவார்த்தை கடந்த 26 ஆம் திகதி நடந்துள்ளது. அன்று நடைபெற்ற அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் மாநாட்டின் போது ஜனாதிபதியுடன் தேர்தல் திணைக்களத்தின் மேற்படி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் பல அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட போதிலும் இந்த இரகசிய பேச்சுவார்த்தையில் அவர்கள் எவரும் இணைத்து கொள்ளப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனாதிபதி உள்ளிட்டோரும் குறித்த தேர்தல் திணைக்கள அதிகாரியும் ஒட்கா மதுபானம் அருந்தி போதையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றிய தகவல்கள் கசியவில்லை. எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக மிக முக்கியமான இறுதி தீர்மானங்களை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை வரை விசேட அவகாசம்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரைப் பதிந்து கொள்ள நாளை வரை விசேட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தும், பெயர் விடுபட்டுள்ளவர்களும் அதுதொடர்பில் மேற்குறித்த நபர்களைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு உள்ள வாக்காளர் பட்டியல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்ட உரை விவாதத்தை தவிர்ப்பு?
வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் ஆளுங்கட்சியினரும் ஆர்வமின்றி நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு - செலவுத்திட்ட உரைமீதான நேற்றைய விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் நான்கு பேச்சாளர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.
இதன் காரணமாக நேற்றைய விவாதம் மாலை 4.30 மணியுடன் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்று காலை 9.0 மணியளவில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் மீண்டும் தொடங்கியது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko4.html
வாஸ் குணவர்தனவின் மேன்முறையீடு நிராகரிப்பு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 08:27.33 AM GMT ]
முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது மகன் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரி வாஸ் குணவர்தன நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.
மொஹமட் சியாம் கொலை தொடர்பில் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கும் மூவர் அடங்கிய நீதவான் குழாம் அதனை விசாரணை செய்வதும் சட்டவிரோதமானது என வாஸ் குணவர்தன மேன்முறையீட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதியசரர்களினால் இந்த மேன்முறையீட்டு மனு பரிசீலனை செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko5.html

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தினால் வீதி திறந்து வைப்பு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 08:32.41 AM GMT ]
மட்டக்களப்பு வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கத்தினால் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண வீதி அமைச்சின் 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினால் புனரமைப்பு செய்யப்பட்ட வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை வந்தாறுமூலை மேற்கு பொதுமக்கள் சார்பில் ஊர் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பலகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இவ்வீதியினை மாகாண சபை உறுப்பினர் மிககவனம் எடுத்து அதனைப் புனரமைத்துக் கொடுப்பதற்குரிய காரியங்களை மேற்கொண்டமையை ஊர் மக்கள் மிகவும் வரவேற்று அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக இந்நிகழ்வினை மேற்கொண்டதாக விழாவினை ஏற்பாடு செய்தோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko6.html
பாப்பரசரின் விஜயத்தை தடுத்து நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் மகிந்த
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 08:32.58 AM GMT ]
புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பாப்பரசர் வருகை தரும் காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதால், பாப்பரசரின் விஜயம் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு ராஜபக்ஷவினர் சண்டித்தனத்தை காட்டும் அளவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
சில காரணங்களின் அடிப்படையில் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு பேராயருக்கு அறிவித்துள்ளார்.
எனினும் இதற்கு இணங்க மறுத்துள்ள பேராயர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர் கத்தோலிக்க திருச்சபை தனது அறிவிப்பை எழுத்து மூலம் வெளியிடும் என கூறியுள்ளார்.
இதன் பின்னர் கத்தோலிக்கரான தனது பாரியார் மூலம் ஜனாதிபதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதை தவிர்ப்பதற்கான அழுத்தங்களை கொடுத்துள்ளார்.
இதற்கு சரியான பதில் எதனையும் வழங்காத கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ராஜபக்ஷவினர் எடுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வருகிறார்.
இதனால், வேறு குழுக்களை பயன்படுத்தி பாப்பரசரின் விஜயத்தை தடுக்காது போனால் வேறு பிரச்சினைகள் ஏற்படாலம் என்று காரணங்களை கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தடுத்து, அவரது விஜயம் ஜனாதிபதித் தேர்தலினால் தடைப்படவில்லை என்று நாட்டுக்கு காண்பித்து கத்தோலிக்க மக்களின் ஆதரவை பெறுவதே மகிந்த ராஜபக்ஷவின் நோக்கம் எனக் பேசப்படுகிறது.
பிரதம நீதியரசர், எதிர்க்கட்சியின் கொறாடா உள்ளிட்ட பிரதிநிகளுடன் வத்திகான் சென்ற ஜனாதிபதி பாப்பரரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்க செல்லவில்லை எனவும் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரவே சென்றிருந்தாகவும் த இண்டிப்பெண்டன் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடுகளின் ஆட்சித் தலைவர்களின் அழைப்பை ஏற்று பாப்பரசர்கள் நாடுகளுக்கு விஜயம் செய்வதில்லை என்பது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாடுகளின் கத்தோலிக்க திருச்சபைகள் விடுக்கும் அழைப்புகளின் பேரிலேயே பாப்பரசர்கள் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வது வழக்கம்.
இதனடிப்படையில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பிற்கு அமையவே பாப்பரசரின் இலங்கை விஜயம் தீர்மானிக்கப்படும். இதனால், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த அழைப்பை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார்.
இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. பாப்பரசராக தெரிவு செய்யப்படுவதற்கான வாக்கெடுப்பின் போது ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்குரிய 42 வாக்குகளை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தற்போதைய பாப்பரசருக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.
இதனை கௌரவப்படுத்தும் வகையில் 6 வருடங்களுக்கு ஒரு முறை பாப்பரசர்கள் மேற்கொள்ளும் ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது இலங்கைக்கு செல்வது என பாப்பரசர் தீர்மானித்தார்.
எவ்வாறாயினும் விஜயத்தை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாப்பரசர், விஜயம் செய்வதா இல்லையா என்பதை, தான் தீர்மானிக்க முடியாது எனவும் அதனை இலங்கை கத்தோலிக்க திருச்சபையே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko7.html

Geen opmerkingen:

Een reactie posten