தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும்! இந்தியாவிடம் வைகோ கோரிக்கை



வறுமை நிலையைப் போக்க புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு காலத்தின் கட்டாயம்: க.சத்தியவரதன்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 09:53.59 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவியும் உறுதுணையாக உள்ளது என மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் க.சத்தியவரதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடையோர், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் உதவியும் உறுதுணையாக அமைந்துள்ளது.
இவ்வாறான உதவிகள் எம்மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் பாராட்டபட வேண்டிய விடயமாகும்.
இந்த உதவிகளை நம்மவர்கள் தட்டிக்கழிக்காது அதிலிருந்து உச்ச பயனைப்பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற இனம் காணப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு சுவிஸ் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் முனைப்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட மலசல கூடங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
மலசல கூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராம சேவையாளர் வி.கனகரெட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியவரதன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்தின் வறுமை நிலையிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான காலகட்டத்தில் எமது மக்களின் வறுமை நிலையைப் போக்கி, அவர்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ புலம்பெயர்ந்த எமது உறவுகளின் பங்களிப்பும் காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXku1.html
மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும்! இந்தியாவிடம் வைகோ கோரிக்கை
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 10:33.55 AM GMT ]
நிலச்சரிவில் சிக்கிய மலையகத் தமிழர்களை மீட்கவும் மறுவாழ்வு கொடுக்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரியபெத்த எனும் இடத்தில் மழையின் காரணமாக ஒக்டோபர் 29 ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்.
மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. கொஸ்லாந்த பகுதியில் பெருமளவு வீடுகள் இடிந்து போயிருக்கின்றன.
மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது.
ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடிஉரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி- இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடி உரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை.
இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்ககையும் வஞ்சிக்கின்றது.
நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXku3.html

Geen opmerkingen:

Een reactie posten