[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 01:15.46 PM GMT ]
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவர் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் அடுத்து நடைபெறவிருக்கும் தேசிய மட்டத்திலான தேர்தலை கண்காணிக்க பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை தேர்தல் செயலகத்தின் அதிகாரிகளுக்கு தேர்தலை முகாமைத்துவம் செய்வது தொடர்பான பயிற்சிகளை வழங்க எண்ணியுள்ளதாகவும் கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான தனது பயணம் வெற்றியளித்துள்ளது எனவும் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி குறித்து புரிந்து கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq2.html
மீரியபெத்த- கொஸ்லாந்த மண்சரிவு! மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 01:44.09 PM GMT ]
காலநிலை சீர்கேடு மற்றும் இருள் சூழ்ந்த நிலைமை ஆகியனவற்றினால் இவ்வாறு மீட்புப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
மண்சரிவில் 300 பேர் வரையில் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை காரணமாக எதிர்வரும் 3ம் திகதி வரையில் குறித்த பிரதேசத்தை சூழ்ந்துள்ள பத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq4.html
Geen opmerkingen:
Een reactie posten