[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 04:47.05 PM GMT ]
முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸ் இலங்கை வந்தால் அவரது கதையை முடித்துவிடப் போவதாக சஜின் வாஸ் அச்சுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம் பீ.பீ.சி.க்கு பேட்டியளித்த கிறிஸ் நோனிஸ் அதனை உண்மை என்று ஏற்றுக் கொண்டதுடன், இலங்கைக்கு திரும்பிச் செல்வதில் தான் அச்சம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கிறிஸ் நோனிஸ் தைரியமாக இலங்கைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கிறிஸ் நோனிஸ் இற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தான் கவனித்துக் கொள்வதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ள கிறிஸ் நோனிஸ், அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
எனினும் சஜின் மற்றும் ஷேணுகா இருக்கும் வரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தான் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkr1.html
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு கடும்போக்கு சிங்கள அமைப்புகள் ஆதரவு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 04:53.06 PM GMT ]
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கொழும்பு, பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பொதுபல சேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய, ராவணா பலய, பிக்சு பெரமுண , தர்ம விஜய பதனம, ஹெல ராவய உள்ளிட்ட சுமார் 53 அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன.
சிங்களவர்களின் எதிர்காலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் மட்டுமே பாதுகாக்கப்படும். சிங்கள பௌத்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஒரே தேசியத் தலைவர் அவர்தான்.
மேலும் ஏனைய இனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சிங்கள பௌத்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கடந்த காலங்களில் ஜனாதிபதி சிறந்த முன்மாதிரியை வெளிக்காட்டியுள்ளார்.
எனவே அவருக்கே எதிர்வரும் தேர்தலிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக நாட்டின் அனைத்து விகாரைகள் வழியாகவும் அவ்வப்பிரதேச பொதுமக்களை அறிவுறுத்தி, மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பது முயற்சிக்க வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த பிக்குமார்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார், பாப்பரசர் வருகைக்கு முன் நடக்கும்! தேர்தல்ஆணையாளர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பாப்பரசரின் வருகைக்கு முன் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியொன்றை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஒருசிலர் வலியுறுத்துகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை சட்டப்படி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
ஜனாதிபதித் தேர்தலில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக யாரும் கருதினால், அதனை அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை, நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்று பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியே பாப்பரசருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையன் என்ற வகையில் நாட்டு நலன் எனக்கு முக்கியம். அதன் காரணமாக பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக அமைதியான சூழல் நிலவும் வகையில் ஜனவரி 8ம் திகதிக்குள்ளாக தேர்தலை நடத்தி முடிப்பதே எனது இலக்காக இருக்கின்றது என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkr2.html
Geen opmerkingen:
Een reactie posten