தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம்! பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்

கர்நாடகத்தில் உள்ள மங்களூர் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியை அதே கல்லூரி பேராசிரியர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்ததாக கல்லூரி பேராசியர் மீது மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த போராட்டத்தை நடத்துவேன் என்று அக்கல்லூரி ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார். மேலும் போலீசாரிடம் கல்லூரி பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலத்காரம் செய்துள்ளார் என்று புகார் கூறியுள்ளார்.
இது குறித்து கல்லூரி மாணாவி கூறியதாவது;
மங்களூர் பல்கலைகழகத்தில் நான் கொடவா மொழி பயிலும் மாணவி கன்னடம் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக இங்கு வந்து சேர்ந்தேன். பேராசிரியர் வெதாவ கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2 தேதி அவரது வீட்டில் வைத்து என்னை பாலியல் பலத்காரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து என்னை ஒருவருடமாக பேராசிரியர் பாலியல் பலத்காரம் செய்து வந்தார். பின்னர் வருத்தம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் என்னை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
இது குறித்து நான் கல்லூரியின் துணைவேந்தரிடன் நடந்தவற்றை கூறினேன்.
பின்னர் பேராசிரியர் வெதாவவிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது பல்கலைகழகவிதிகளின் படி அவர் மீது சட்டபடை நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்லூரி பதிவாளர் எடப்பாடித்தா கூறினார். இது குறித்து கல்லூரி பேராசிரியர் வெதாவா கூறியதாவது;


என்னை அவமானபடுத்துவதுவதற்க்காக சதி நடக்கிறது நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் இது போன்ற செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினார். இந்த புகார்கள் ஆதரமற்றது என்று நிருபிப்பேன் நான் சட்டபடி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார். இதற்கிடையில் கல்லூரி மாணவிக்காக மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.Research-student
http://www.jvpnews.com/srilanka/85428.html

Geen opmerkingen:

Een reactie posten