வடக்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடக்கிற்கு பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் தங்களது விபரங்களை மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் சமர்ப்பிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 1094112328109 என்ற இலக்கத்தின் ஊடாக தொலைநகல் (FAX) வாயிலாகவும், modclearance@yahoo.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தகவல்களை அனுப்பி வைக்க முடியும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள், மன்னார் மாவட்டத்தின் வெடத்தல்தீவு பிரசேதம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை வழியாகவும் வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டு கடவுச் சீட்டு உடையவர்கள் முன் கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பத்தாரியின் பெயர்:
வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம்:
பயணம் ஆரம்பிக்கப்படும் திகதி:
பயணம் முடிவடையும் திகதி:
பயணத்திற்கான காரணம்:
பயணம் செய்வது தனியார் வாகனத்திலா அல்லது வேறும் வழியிலா: தனியார் வாகனம் என்றால் அதன் பதிவிலக்கம், சாரதி பற்றிய விபரம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பிரதேசத்தில் முதலீடு அல்லது அபிவிருத்தித் திட்டமொன்றினை மேற்கொள்ளும் நோக்கில் பயணித்தால் அந்த நிறுவனத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டுமென அசராங்கம் தெரிவித்துள்ளது. இது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்களையும், மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆட்களையும் வடக்கிற்கு அனுப்ப அரசு, விரும்பவில்லை என்பதே இதன் நோக்கம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1341.html
Geen opmerkingen:
Een reactie posten