தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

மாணவர்களை தூண்டி விட்டு இப்ப ஓடி ஒளிந்துகொள்ளும் சில தமிழக பிழைப்புவாதிகள் !


கத்திப் படத்தை லைக்கா என்னும் நிறுவனம் தயாரிக்கிறது என்றும், அது இலங்கையில் தனது வர்தகத்தை பரப்பியுள்ளதால் கத்தி படத்தையே எதிர்க்கவேண்டும் என்று தமிழக மாணவ அமைப்புகள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததில் ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இதனை குறுகிய அரசியல் நோக்கில் தமக்கு சாதகமாக்க பயன்படுத்த வேல் முருகன், தொல் திருமாவளவன், மற்றும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் பின் நிற்கவில்லை. மாணவர் செய்த ஆர்பாட்டத்தை மேலும் தூண்டி விட்டு அதில் தமது கட்சியின் பெயரைச் சொல்லி குளிர்காய்ந்தார்கள் இந்தப் பிழைப்புவாதிகள். தற்போது மாணவர் அமைப்பில் உள்ள மூன்று முக்கிய நபர்களை பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
ஆனால் இதற்காக எந்த ஒரு நடவடிக்கையையும் இவர்கள் எவரும் எடுக்கவில்லை. ஒரு சாட்டுக்கு பொலிஸ் நிலையம் சென்று, கைதான மாணவர்களை பார்வையிட்டார்கள். பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே வந்து பேட்டி கொடுத்தார்கள். பின்னர் அப்படியே பிரியாணியை சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார்கள். தாங்கள் ஒரு பக்கா அரசியல்வாதி என்று இவர்கள் நிரூபித்துள்ளார்கள். இதேவேளை கைதுசெய்யப்பட்ட அந்த 3 மாணவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்னதாக நேற்று(27) பல இளைஞர்கள் கூடி ஆர்பாட்டத்தை செய்துள்ளார்கள். இதனை லண்டர் TCC ஒழுங்கு செய்து இருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.  குறைந்த பட்சம் தமிழகத்தில் இந்த மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று, இந்த அரசியல்வாதிகள் எந்த ஒரு ஆர்பாட்டத்திலும் இதுவரை ஈடுபடவே இல்லை.
இதில் வேல் முருகன் என்னும் நபர், தனக்கு அம்மாவின் ஆதரவு இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டு அலைந்து திரியும் நபர். அப்படி என்றால் ஏன் வேல் முருகனால் இந்த 3 மாணவர்களையும் வெளியே எடுக்க முடியவில்லை ? எடுக்க முடியவில்லையா இல்லை எமக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று இவர்கள் ஒதுங்கிவிட்டார்களா ? இறுதி நேரத்தில் லைக்காவுடன் சமரசமாக பேசி கத்தி படத்தை ஓட நாம் அனுமதித்தோம் என்று வேல் முருகன் கூறியுள்ளார். அப்படி என்றால் அதற்காகப் போராடிய மாணவர்களை இவர் நட்டாத்தில் விட்டுவிட்டாரா ? இது குறித்து இவர்கள் மெளனமாக இருக்க என்ன காரணம் ?
ஞானி என்னும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அதிர்வுக்கு எழுதிய கடிதம் இது. இதனை நாம் இங்கே இணைத்து இருக்கிறோம். இதில் உள்ள விடையங்களை படித்தால் என்ன நடக்கிறது என்று புரியும்.
ராஜபக்ச அரசுடன் உறவு வைத்திருப்போரையெல்லாம் எதிர்ப்பது என்பது ஒருவகையில் பாவனைதான். அப்படி எதிர்ப்பதானால், முதலில் மோடி, மோடியின் அமைச்சர்கள் யாருமே தமிழ்நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கறுப்புக் கொடி காட்டியிருக்க வேண்டும். தினசரி, சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் கொழும்புவுக்குச் செல்லும் விமானங்களில் இலங்கையுடன் வணிக உறவு வைத்திருக்கும் தமிழர்களே அதிகம் போய் வருகிறார்கள். அந்த விமான சர்வீஸ்கள் தடுக்கப்படவில்லை. ஐரோப்பாவில் புலிகளின் பழைய, இன்றைய ஆதரவு சக்திகளுக்குள்ளே நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடுதான் லைக்கா பிரச்சினை. எப்போதும் சினிமாக்காரர்களும் சினிமா தியேட்டரும்தான் எதிர்க்க எளிமையான எதிரிகள்.
லைக்காவை எதிர்த்து தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டிருந்த அதே நாளில், டெல்லியில் தன் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்திருக்கும் கோத்தபய ராஜபக்சவுடன் அருண் ஜேட்லி ராணுவ ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடத்தினார். விவரங்களை நிருபர்களிடம் வெளியிட மறுத்துவிட்டார். அடுத்த முறை அருண் ஜேட்லியோ அல்லது மோடியோ தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்று தடுக்க முடியுமா ? மீனம்பாக்கத்திலிருந்தும் திருச்சியிலிருந்தும் தினசரி கொழும்புவுக்குச் சென்று வரும் விமானத்தைப் பறக்க விடாமல் தடுக்க முடியுமா ?
இலங்கைத் தமிழர்களின் அசல் பிரச்சினைகளைத் தீர்க்க, சரியான வழிகளைத் தேட இயலாமல், நிழல்களைப் பூதங்களாகக் காட்டிப் போராடும் அபத்தம்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த முறை அருண் ஜெட்லி அல்லது மோடி தமிழகம் வரும்வேளை மீனம்பாக்கத்தில் வைத்து இந்த வேல் முருகனால் கறுப்புகொடி காட்ட முடியுமா ? மோடி வரும்போது இவர்கள் எங்கே ஓடி ஒளிந்துகொள்வார்கள் என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.
ஞாநி, மூத்த பத்திரிகையாளர்,
http://www.athirvu.com/newsdetail/1316.html

Geen opmerkingen:

Een reactie posten