[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 10:01.40 AM GMT ]
கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிலைமையை பார்வையிட ஜனாதிபதி நேற்று அங்கு சென்றிருந்த நிலையில், அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அங்கு செல்லும் முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாடசாலைகள் பாதுகாப்பு தரப்பினரின் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தது போல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குடும்ப உறவினர்களை இழந்து வேதனையில் இருந்த மக்களுக்கு இவ்வாறு மேலதிக அழுத்தத்தை கொடுத்தமை குறித்து ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
ஜனாதிபதியின் வருகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காலை உணவு வழங்குவதும் தாமதமானது.
ஜனாதிபதி அனர்த்த நிலைமைகளை பார்வையிட்ட திரும்பிய போதும் உயிர் பிழைத்த மக்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ஜனாதிபதி பரிவாரங்களுடன் விஜயம்
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், விமல் வீரவன்ச உள்பட முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களின் வருகையை எதிர்பார்த்து காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு அமைச்சின் புற்தரையில் இரண்டு வான்படை ஹெலிகெப்டர்கள் வந்து காத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் கொஸ்லாந்தை விஜயத்தின்போது மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஜனசெவண வீடமைப்புத்திட்டம் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjp2.html
இந்திய மீனவர் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவுக்கு கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 10:10.43 AM GMT ]
இந்திய மீனவர்கள் மீதான மரண தண்டனை குறித்து தனது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சாமி, '2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு சென்ற பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதுதொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjp3.html
Geen opmerkingen:
Een reactie posten