தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

ஐந்து தமிழக மீனவர்களையும் காப்பாற்றுங்கள்: மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை- இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிப்பு!

நிலக்கரி கொள்வனவில் ஊழல் என்றால் அமைச்சர் பவித்ரா ஏன் முறைப்பாடு செய்யவில்லை?
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 01:04.06 AM GMT ]
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க காலத்தில் நிலக்கரி கொள்வனவின் போது, 1500 மில்லியன் ரூபாய்கள் ஊழல் இடம்பெற்றதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குற்றம் சுமத்துகிறார்.
எனினும் ஏன்? அவர் அது தொடர்பில் இலங்கையின் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறையிடவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு பேருமே குறித்த கொள்வனவின் போது ஊழல் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர். எனினும் இருவரில் எவரும் இது தொடர்பில் முறையிடவில்லை என்று ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 1500 மில்லியன் ரூபாய்கள் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஏன் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் விஜயதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போதே இந்த கேள்விகளை அவர் தொடுத்தார்.
இதேவேளை அரசாங்கமும் இந்த விடயத்தில் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்க தயாரில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkw6.html
அரசாங்கம் போலி வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது: ஆர். யோகராஜன்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 01:14.58 AM GMT ]
மக்களை ஏமாற்றும் வகையில் அரசாங்கம் போலியான வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டம் எவ்வித அர்த்தமும் அற்றது.
போலியான வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.
மக்கள் இந்த போலி வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அவை உரிய முறையில் நிறைவேற்றப்படுவதில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலைமை பெரும் கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களை சுரண்டுவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்: அகில விராஜ்
நாட்டு மக்களை சுரண்டுவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தலை முழுக்க முழுக்க இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஓர் மாய வரவு செலவுத் திட்டமாகவே இதனைக் கருத வேண்டும்.
இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட மாட்டாது.
ரஜரட்ட பிரதேசத்தில் சிறுநீரக நோய் பரவி வருகின்றது.
தரம் குறைந்த மற்றும் இரசாயன செறிவுடைய உர வகைகள் மண்ணில் கலப்பதே இதற்கான காரணமாகும்.
சிறுநீரக நோயாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு போதுமானதல்ல. அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. வசதிகள் கிடையாது.
பணத்திற்கு கல்வி விற்பனை செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தரமற்ற தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதிலும் இயங்கி வருகின்றன. கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதல்ல.
இந்த வரவு செலவுத்திட்டத்தை ஓர் மாயாஜால வரவு செலவுத் திட்டமாக அடையாளப்படுத்த முடியும்.
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்கள் ஏமாற்றும் நோக்கில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkw7.html
வாக்குகளை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது: இரா. சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 02:07.47 AM GMT ]
வாக்குகளை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சில தரப்பினருக்கு நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாது தேர்தலை இலக்கு வைத்து சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எமக்கு உடன்பாடில்லை.
நல்லாட்சியை இன்று நாட்டில் காண முடியவில்லை.  நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
வெளிநாட்டு உதவியுடன் சில அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், அரசாங்கம் சொந்த நிதியில் வட, கிழக்கு மக்களுக்கு எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
மீன்பிடித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை தொடர்பிலான நிதி ஒதுக்கீடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப அரசாங்கத்தின் உதவி அவசியமாகின்றது. எனினும், போதியளவு உதவிகள் கிடைக்கப்பெறுவதில்லை.
மீள்குடியேற்றம் என்பது மிகவும் பாரிய செயன்முறையாகும். அதனை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
அரசாங்கம் குறுகிய அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றது.
எமது மக்கள் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் அல்ல.
எங்களுக்கு போர் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
தேசிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டிருந்தால் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய போர் இடம்பெற்றிருக்காது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அரசாங்கம் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நோக்குகின்றது. இது வேதனைக்குரியது.
ஐக்கிய பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேண்டும் என்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.
எமது நாட்டுப் பிரச்சினைக்கு நாமாகவே தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx0.html

ஜப்பானியத் தூதுவர்- வடக்கு முதல்வர் சந்திப்பு!
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 02:18.41 AM GMT ]
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதுகுறித்து வடக்கு முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தச் சந்திப்பின் போது வடமாகாண சபையின் நடவடிக்கைகள் அது எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினோம்.
வடபகுதியில் இராணுவக் குறைப்பு தொடர்பாக அவர் என்னிடம் கேட்டார்.
இராணுவக் குறைப்பு என்று கூறிக் கொண்டு பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகவே அபகரிக்கப்படுகின்றன.
ஓரிடத்தில் இருந்து இராணுவத்தினரை அகற்றி இன்னோர் இடத்தில் அவர்களுக்கு முகாம் அமைப்பதற்காகவே காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்பதை ஜப்பான் தூதுவருக்கு விளக்கின் கூறினேன்.
மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்களைச் செய்வதற்கு இராணுவத்தினர் இடையூறாக இருக்கின்றனர் என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன்.
சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது குறித்தும் ஜப்பானிய அரசின் தொழில்நுட்பத்துடன் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் தூதுவருடன் கலந்துரையாடினேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx1.html
ஐந்து தமிழக மீனவர்களையும் காப்பாற்றுங்கள்: மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை- இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 02:38.49 AM GMT ]
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
அதில், போதைவஸ்து குற்றச்சாட்டின் பேரில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் உண்மையில் அப்பாவிகள், இந்தநிலையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்தவிடயத்தை உயர்மட்டத்தில் எடுத்துச் சென்று தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்றுமாறு பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.
இதற்காக இந்தியப் பிரதமர் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்துக்கு உரிய பணிப்புரைகளை விடுக்கவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுள்ளார்.
இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிப்பு
இந்தியாவின் சென்னை நகரில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தின் துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுஷா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் அக்கட்சியில் பணியாற்றியுள்ளார்.
கட்சியில் இருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் சினமன் கிரேன்ட் ஹொட்டலில் நடைபெற்றது.
அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அனுஷா சிவராஜா மத்திய மாகாண கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx3.html

Geen opmerkingen:

Een reactie posten