[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 01:09.01 PM GMT ]
புலிகள் மீள உருப்பெறுவதற்கு வழிவகுத்துவிட்டு 'தலையில் அடிப்போம்' என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவத்திருக்கும் கருத்து வேடிக்கையானது என விமர்சித்துள்ள மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் புலிகளின் தலையில் அடித்தால் அதன் பிரதிபலன்கள் அரசுக்கு பாதகமானதாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேல்மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வடமாகாணசபைத் தேர்தலை நடத்திவிட்டு சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கிவிட்டோம் என நாடகமாடிய அரசாங்கம் இன்று அம் மாகாணசபையின் கழுத்தை நெரித்துக்கொண்டு உரிமைகளை பறிக்கும் அரசாங்கம் தமிழ் மக்களின் வாழ்வதாரத்தையும், அரசியல் ஜனநாயக உரிமைகளையும் பறித்தெடுத்துள்ளது.
வடக்கில் தமிழ்மக்கள் இன்று சுதந்திரமாகந நடமாடமுடியாத வகையில் 'புலனாய்வுப் பிரிவினரால்' சுற்றி வளைக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட இனமாக நடைப்பிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த தடைநீக்கத்தை அரசு தனது தேர்தல் பிரசாரத்திற்கான யுக்தியாக ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஆனால் மறைமுகமாக இத்தடை நீக்கத்தை பயன்படுத்தி புலிகளின் சொத்துக்களை சுவீகரிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார செலவுகளுக்காகவே அரசு இம் முயற்சியை முன்னெடுக்கின்றது.
பெரும்பான்மை சிங்கள மக்களை புலிப்பூச்சாண்டி காட்டி அச்சுறுத்தி வாக்குகளை கொள்ளையடிக்க முயலும் அரசு மறுபுறம் புலிகளின் சொத்துக்களை சூறையாடவும் புலிகளை தலையில் அடித்து தட்டிவைப்போம் என்ற பொய்ப்பித்தலாட்ட பிரச்சாரத்தையும் முன்னெடுக்கின்றது என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu6.html
வடமாகாண சபை சாதித்த விடயங்கள்! பட்டியலிடுகிறார் அவைத் தலைவர்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 01:27.37 PM GMT ]
வடமாகாண சபை பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக பயணித்துள்ளது. தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டு கடந்த 25ம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
அதன் பின்னர் இன்றைய தினம் மாகாண சபையின் 18வது அமர்வு நடைபெற்றது.
கடந்த ஒருவருட காலத்தில் சபையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
கடந்த ஒரு வருட காலத்தில் 138 தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். வெளியில் இருப்பவர்கள் நாம் தீர்மானங்களை நிறைவேற்றும் ஒரு சபையாக இருக்கின்றோம் என விமர்சிக்கலாம். ஆனால் எங்கள் மக்களின் வாழ்வாதாரம், இருப்பு, இராணுவ பிரசன்னம், இராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களையே தீர்மானமாக நிறைவேற்றியிருக்கின்றோம்.
இலங்கையில் மற்றய மாகாணங்கள் ஒவ்வொன்றும் 25வருடகால அனுபவத்தைக் கொண்டிருக்கும் நிலையில் நாம் மிக குறுகிய ஒரு வருடகாலத்தில் எங்கள் மக்களுடைய பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்களுடைய அவலங்களை வெளிக்கொண்டுவரும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.
வரவு செலவு திட்டத்தையும், இரு நியதிச்சட்டங்களையும் உருவாக்கி மிக சிறப்பாக எங்களுடைய ஒரு வருடகாலத்தை பூர்த்தி செய்துள்ளோம்.
மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வெற்றி கண்டிருக்கின்றோம். என்ற வகையில் நாங்கள் பெருமையடைகின்றோம். அனைவரும் பெருமைப்படக் கூடிய விடயம் இதுவாகும்.
எம் முன்னால் பல தடைகள் விதிக்கப்பட்டாலும், அத்தனை தடைகளையும் தாண்டி நாங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்திருக்கின்றோம். தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பெருச்சாளிகள் போன்று கொள்ளையடிக்கும் அதிகாரிகள்! சபையில் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர்
வடமாகாணசபை ஆட்சியின் கீழ் உள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூராட்சி ஆகிய துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் பெருச்சாளிகள் போன்றே கொள்ளையடிக்கின்றார்கள்.
இரு துறைகளும் மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவற்றை சீர் செய்வதற்கு உடனடியான நடவடிக்கை வேண்டும் என வடமாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மாகாண சபையின் 18வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தபோதே மேற்படி விடயத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவில் 5ஆயிரம் ரூபா காசோலை மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பின்னர் எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் அந்தப் பதவிக்கு வந்துவிட்டார். அதற்காக தனது முன்னாள் குற்ற அறிக்கையை அழிப்பதற்காக 1லட்சம் ரூபா கொடுத்ததாக அறிகின்றோம்.
இதேபோன்று டீசல், மக்களுக்கான அரிசி போன்றவற்றில் மிக மோசமான மோசடிகள் இடம்பெற்று தானியங்களை களவாடும் பெருச்சாளிகளை விட மோசமான பெருச்சாளிகளாக அதிகாரிகள் மாறியிருக்கும் நிலையில் வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியிருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பல முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக பருத்துறை பிரதேச சபையில் முன்னதாகவே கட்டப்பட்ட சந்தை ஒன்றின் நிறைவேற்றப்படாத வேலைகளை செய்வதற்காக உப ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட ஒருவர் ஊடாக கேள்வி பத்திரங்கள் பரிசீலிக்கும், சபையின் தலைவர் பல லட்சம் மோசடி செய்துள்ளார்.
குறிப்பாக 6 லட்சம் ரூபா செலவில் போட கூடிய ஜன்னல்களுக்கு 15 லட்சம் பணம் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல 25 ஆயிரம் ரூபா செலவில் போடக்கூடிய நீர் பம்பிக்கு ஒரு லட்சத்து 65ஆயிரம் பெற்றுள்ளனர். அதனை பொருத்துவதற்கு 35 ஆயிரம் பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு ஆல மரம் தறிப்பதற்கு 4 லட்சம் பெற்றுள்ளனர். இவ்வாறு மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன என சபையில் சுட்டிக்காட்டினர்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlu7.html
மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிய இளைஞன்! மடக்கிப் பிடித்த ஆசிரியர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 03:14.00 PM GMT ]
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இளைஞனை ஆசிரியர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இன்று மதியம் உரும்பிராய் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் ஹரிஹரரூபன் (வயது 8) என்ற மாணவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளான்.
குறித்த மாணவன் பாடசாலை முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்காக வீதியைக் கடத்துள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் குறித்த மாணவனை மோதியுள்ளார். அதனையடுத்து கீழே விழுந்த இளைஞன் உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.
இதனைக் கண்ட அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் குறித்த இளைஞரை துரத்திச் சென்று பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்த மாணவன் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனும் விபத்தில் காயமடைந்திருந்ததனால், பொலிஸார் அவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlvz.html
அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ் செல்லும் வாய்ப்பு! ஜனாதிபதியின் வாக்குறுதி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 03:33.34 PM GMT ]
ஜனாதிபதி இன்று திருகோணமலையில் நடைபெற்ற பல்வேறு வைபவங்களில் கலந்து கொண்டார். மூதூர் பிரதேசத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வாக்குறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது வசதியுள்ள முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ்ஜுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். எனினும் எதிர்காலத்தில் வசதியற்ற இலங்கை முஸ்லிம்களும் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை எனது தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தித்தரும்.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பொருளாதார பலம் சில வருடங்களுக்குள் அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் காரணமாக இன்னும் சில வருடங்கள் கழிந்தால் வசதியற்றவர்கள் என்று யாரும் இலங்கையில் இருக்க மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv0.html
Geen opmerkingen:
Een reactie posten