ஒரு சில மாதங்களாக பிரான்சில் வதிவிட உரிமை இல்லாதவர்களை பிரான்ஸ் பொலிசார் கைது செய்து இலங்கைக்கு திருப்பியனுப்பப் படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் சார்சல் என்னும் இடத்தி வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்களை வதிவிட உரிமை நிராகரிக்கப் பட்டதன் காரணத்தால் அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்டனர்.
அத்துடன் பல ஆபிரிக்க நாட்டவர்களும் , பங்களதேஸ் , மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் பொலிசார் கைது செய்து வருகின்றனர் , இந்தத் தகவலை பரிசியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. வதிவிட உரிமை இல்லாதவர்களை கைது செய்யவென விசேட போலிஸ் குழு செயல்ப்பட்டு வருகின்றது,
பிரான்சில் வசிக்கும் தமிழர்கள் வதிவிட உரிமை இல்லாமல் இருந்தால் உடனடியாக திரும்பவும் விண்ணப்பிக்கவும். அத்துடன் தாங்கள் விண்ணப்பித்தவுடன் தங்களுக்கு "Cour nationale du droit d’asile"லினால் அனுப்பப்படும் கடிதத்தினை தாங்கள் எங்கு சென்றாலும் கொண்டு செல்லவும்.
"பிரான்ஸ் சட்டப்படி அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த ஒருவரை நாடு கடத்த முடியாது" இது மீள் விண்ணப்ப தாரிகளுக்கும் பொருந்தும்.
மேலதிக தகவல்கள்
NOTICE: The benefit of refugee's status can be widened, in accordance with the principle of the unity of family (general principle of refugee’s law), to 01- the spouse/husband 02- the common law spouse/husband of the refugee (condition of community of effective life and identical 03-nationality at the time of the deposit of the application for asylum of the refugee with "main" title 04 his/her children in their date of entry on the French territory.
|
Geen opmerkingen:
Een reactie posten