தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

மக்களின் உயிரை காப்பாற்றும் பொறுப்பை அரசாங்கம் உரிய வகையில் நிறைவேற்றவில்லை: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 10:34.31 AM GMT ]
மக்களின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பினை அரசாங்கம் உரிய வகையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இப்போது என்ன சொன்னாலும் மக்களை பாதுகாக்கத் தவறியுள்ளது.
மீரியபெத்த மண் சரிவு அனர்த்தம் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலை கட்சியின் சார்பில் வெளியிடுகின்றோம்.
இலங்கை வரலாற்றில் பாரியளவிலான மண்சரிவு அனர்த்தம் இதுவாகும்.
எனினும் இதனை அரசாங்கம் சுனாமி அனர்த்தத்திற்கு நிகராக்க முயற்சிக்கின்றது. சுனாமியையும் இந்த மண் சரிவு அனர்த்தத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் கருத்து மூலம் அனர்த்தம் பற்றி ஏற்கனவே அரசாங்கம் அறிந்திருந்தமை வெளிச்சமாகியுள்ளது.
என்ன சொன்னாலும் மக்களின் உயிரை அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.
2005ம் ஆண்டிலேயே குறித்த பிரதேசத்தை அபாயகரமான பிரதேசமாக பெயரிட்டால் இத்தனை காலம் ஏன் பிரதேச மக்கள் தங்க வைக்கப்பட்டனர்? ஏன் அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படவில்லை? என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மண்சரிவு அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் லாபமீட்ட முயற்சிக்க வேண்டாம் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXku4.html
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 10:50.06 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
தேசமாமவக ஜாதிக வியாபாரய (தேசப்பற்றுடைய தேசிய அமைப்பு) என்ற அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.
இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை அனுப்பியதன் மூலம் மாகாண சபை உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதார்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இது சம்பந்தமாக பொலிஸாருக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனால், இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
இதனையடுத்து மேற்படி விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்யுமாறு நீதிமன்றம் மனுதார் தரப்புக்கு அறிவித்தது.
முறைப்பாடு குறித்து பொலிஸார் நியாயமான விசாரணைகளை நடத்தவில்லை என்றால், மனுதாரர்கள் மீண்டும் மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXku5.html

Geen opmerkingen:

Een reactie posten