[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:13.56 AM GMT ] [ வலம்புரி ]
குறித்த நாய்க்கு நீர் வெறுப்பு நோய் உள்ளதா? என்பதை அறிவதற்காக நாயின் தலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மனிதர்கள் எவரையும் கடிக்காமல் அந்த நாய் இறந்து போயிருந்தால் அந்த நாயின் தலையை கொழும்புக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க மாட்டாது.
ஆக, மனிதர்களைக் கடித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற அடிப்படையில் நாயின் தலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை யார் அடித்தாலும் கடித்தாலும் சுட்டாலும் அவர்களுக்கு விசர் என்று அறிக்கை விடுகின்ற ஒரு கலாசாரம் இந்த நாட்டில் இருப்பதன் காரணமாக, தெல்லிப்பழையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நாய்த் தலையின் பரிசோதனை முடிவும் நாய்க்கு விசர் என்பதாக அமையும் என்று அடித்துக் கூறலாம்.
அண்மைக் காலமாக நாய்க் கதைகளே செய்தி ஊடகங்களில் இடம் பிடித்து வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் வட பகுதிக்கான விஜயத்தோடு ஆரம்பித்த நாய்க் கதை இன்னும் ஓய்ந்த பாடில்லை.
இது ஒரு புறம் இருக்க, நாலு பேரை ஒரே நாளில் கடித்து அன்றைய தினமே இறந்து போன நாயின் தலையை பரிசோதிப்பதற்காக கொழும்புக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால்,வன்னிப் போரில்-கடந்த கால யுத்த நடவடிக்கைகளின் போது- எமது மக்களைச் சுட்டுக்கொன்ற கடத்திச் சென்ற; காணாமல் போக செய்தவர்கள் மீது விசாரணை நடத்துவது கட்டாயமானதல்லவா?
மனித வதையை செய்தவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கும் போது, அவர்கள் குறித்து விசாரணை நடத்துவதும், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிப்பதும் உண்மையைக் கண்டறிவதற்கு மிகவும் அவசியமானவை.
ஆனால் இங்கோ சாட்சியம் அளிப்பதற்கு விண்ணப்பம் கொடுத்தவரை கைது செய்கின்ற கொடுமைத்தனம் நடக்கிறது. பாதிக்கப்பட்டவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறுவதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு.
அதற்கு எவர் தீங்கிழைக்கின்றாரோ அவர் நடந்தேறிய அக்கிரமத்துடன் தொடர்புபட்டவராகவே இருக்க முடியும்.
அக்கிரமங்கள் தொடர்ந்தும் அரங்கேறும் என்று நினைப்பது மகாதவறு. கைதுகள் மூலமாக, பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிப்பதைத் தடுக்க நினைப்பது இந்த நாட்டில் மீண்டும் அமைதி இன்மையை ஏற்படுத்துவற்கு வழிவகுக்கும் என்பது உணரப்பட வேண்டும்.
அதேசமயம் ஏற்பட்ட பாதிப்பை, இழப்பை வெளிப்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என்று காட்டுவதற்காக கைதுகள் நடக்குமாயின், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிப்பதற்கு, மாற்று வழிகளும் கால அவகாசங்களும் தேவைப்படுவதாக இருக்கும்.
அதட்டல், வெருட்டல் மூலமாக உண்மைகள் மறைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதால் இது தொடர்பில் தென்பகுதியைச் சேர்ந்த மனித நேய அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அவசியம்.
நான்கு பேரைக் கடித்த நாயின் தலை கொழும்புக்கு அனுப்பப்படுகின்றது எனின் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களை வதை செய்த மனிதத் தலைகள் கீழே விழுத்தப்பட வேண்டும். இதுவே நீதியின் தீர்ப்பாக இருக்க முடியும்.
வலம்புரி
http://www.tamilwin.com/show-RUmszARcKXls6.html
வடமாகாண சபைக்கு பெயர் மாற்றிய தவராசா
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 05:10.12 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து இதுவரை வடமாகாண சபை 17 தடவை கூடியுள்ளது. முதலாவது அமர்வு சம்பிரதாயபூர்வமானது ஏனைய சில அமர்வுகளின் போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இறுதியாக இடம்பெற்ற அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. அதனைத்தவிர 14 தடவைகள் கூடியுள்ளது. அதன் போது 150ற்கும் அதிகமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் என்னிடம் உள்ளன. அதில் என்ன விடயங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏதாவது ஒன்றைக் கூறுவார்கள். இல்லாவிடின் வேறு எவருக்காவது கூறுவர்.
இவை மாகாண சபையுடன் தொடர்புபட்ட விடயங்கள் அல்ல. இந்தப் பிரேரணைகள் அர்த்தமற்றவை. எனவே வட மாகாண சபையின் பெயரை புதிய பிரேரணை சபை எனப் பெயர் மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXls7.html
Geen opmerkingen:
Een reactie posten