[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 10:14.48 AM GMT ]
அண்மையில் இவ்வுற்பத்தி நிலையத்தினை சுற்றிவளைத்த சுகாதாரத் திணைக்களத்தின் விசேட குழுவினர் இங்கு மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் ஜுஸ் உற்பத்தி நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர்.
சிறிய வீடு ஒன்றில் தொலைத் தொடர்பு நிலையம், புகைப்பட நிலையம் என்பவற்றுடன் குளியலறையில் ஜுஸ் உற்பத்தியும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அசுத்தமான நீரில் மருத்துவச் சான்றிதழ் எதுவும் பெறப்படாமல் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது.
இந்நடவடிக்கையின் போது பெருமளவிலான ஜுஸ் பக்கெற்றுக்கள் நீதிமன்றினால் மனிதப் பாவனைக்கு உதவாதவை என முடிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதன் போது கைப்பற்ற ஜுஸ் உற்பத்திக்குப் பாவிக்கப்படும் வாசனைத் திரவியம் கிருமிநாசினிப் போத்தலில் சேமிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான உற்பத்திப் பொருட்களினால் பெரும்பாலும் சிறுவர்களே பாதிப்படைவதாகவும் இவ்வாறான தொடர் நடவடிக்கைகளை விரைவாக நடாத்தும் படியும் வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkp4.html
புலிகளின் தடையை இந்தியா நீக்காது: மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 11:43.33 AM GMT ]
இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாத விடயங்களின் அடிப்படையில் புலிகளின் ஆதரவாளர்கள் இந்தியாவில் அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளினால் ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை 4 ஆண்டுகள் விசாரித்த பின்னர் அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றம் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.
வழக்கில் பிரதிவாதிகள் புலிகளின் ஆதரவாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை குறிப்பிட்டிருந்துடன், புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பல்ல என்றும் இறுதியில் வாதிட்டிருந்தனர்.
புலிகளின் அமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பாவில் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பாவில் எந்த சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செவயல்களில் ஈடுபடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பின் மூலம் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை. அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார தடைநீக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நிதி சேகரிக்கவும் மீண்டும் உறுப்பினர்களை சேர்க்கவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கான பெருமளவில் அவர்களால் பணத்தை செலவிட முடியும். இதன் அடிப்படையிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது.
இவ்வாறான வழக்கில் மேன்முறையீடு செய்யவும் தீர்ப்பை மீளாய்வு செய்யவும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கினால், அது 27 நாடுகளுக்கு அந்த தீர்ப்பு செல்லுப்படியாகும். ஆனால், உண்மையில் ஐரோப்பிய நாடுகள் புலிகளுக்கு விதித்த தடையை நீக்கவில்லை. அந்த நாடுகளின் நாடாளுமன்றங்களே தடைகளை விதித்துள்ளன.
எனினும் ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மதித்து ஐரோப்பிய நாடுகளால் புலிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கைகளை எடுக்கப்பட மாட்டாது.
விடுதலைப் புலிகள் பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் பெருமளவில் பணத்தை சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை பயன்படுத்தி வைகோ போன்ற இந்தியாவில் உள்ளவர்கள் ஒக்சிஜனை பெற முயற்சித்து வருகின்றனர் எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkp7.html
Geen opmerkingen:
Een reactie posten