ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்படாமை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக 2011ம் ஆண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ன காரணத்தினால் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
மீரியபெத்த பகுதி மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதனால் பிரதேச மக்களை அகற்றிக்கொள்ளுமாறு தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக நான் கடமையாற்றிய காலத்தில் நாட்டின் ஆபத்தான வலயங்கள் அடையாளம் காணப்பட்டு வரையப்பட்டது.
இந்தக் காலத்தின் போதே மனித வாழ்விற்கு பொருத்தமற்ற இடம் என மீரியபெத்த பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
மண்சரிவு அபாய அறிவிப்பை தோட்ட முகாமையும் மக்களும் உரிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் பல உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன.
மண்சரிவு அபாய எச்சரிக்கையை தோட்ட நிர்வாகம் உரிய வகையில் செயற்படுத்தாமை தொடர்பில் கட்டாய விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எச்சரிக்கையை உரிய வகையில் கடைப்பிடித்திருந்தால் இந்தளவு உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkr3.html
Geen opmerkingen:
Een reactie posten