தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழு யாழ்ப்பாணம் விஜயம்!

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்ற கூட்டங்களை நடத்தினால் போதுமானது: பிரதமர்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 12:21.47 AM GMT ]
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்ற கூட்டங்களை நடத்தினால் போதுமானது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளுக்காக செலவிடப்படும் பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக செலவிட முடியும்.
வரவு செலவுத் திட்ட விவாதங்களில் எதிர்க்கட்சியினர் பங்கேற்கவில்லை.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்பதற்கு தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே பிரசன்னமாகியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டங்களை நடத்த பாரியளவு பணம் செலவிடப்படுகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
குறைந்த பட்சம் தங்களுக்கு முக்கியமான விவாதங்களின் போதேனும் அவையில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது அவசியமானது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்காமை கவலையளிக்கின்றது.
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அமர்வுகளை கூட்டுவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும்.
அந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு நலன்களை வழங்க முடியும் என பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அவையில் உரையாற்றிய போது ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரே எதிர்க்கட்சித் தரப்பில் பிரசன்னமாகியிருந்தார் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkr4.html
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை இன்று வெளியீடு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 12:31.21 AM GMT ]
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் மனித உரிமைகள் குழு இன்று 112 ஆவது அமர்வில் போது, கண்காணிப்பின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள், முன்னைய பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம், அரசாங்கம் அல்லாத தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கொலைகள், காணாமல் போன சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் சித்திரவதைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அவதானம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் இலங்கை தொடர்பில் முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்த குற்றச்சாட்டையும் அந்தக்குழு மறுத்துள்ளது.
குழுவின் தலைவர் சேர் நைகல் ரொட்லியின் கருத்துப்படி, இலங்கை தொடர்பான மீளாய்வு வெறுமனே வியாபாரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் பாரிய பிரச்சினைகள் உள்ளபோதும் அங்கு சுதந்திரம் நிலைக்க வேண்டும் என்று தமது குழு விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.http://www.tamilwin.com/show-RUmszAQUKXkr5.html
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழு யாழ்ப்பாணம் விஜயம்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 01:12.03 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு நிபுணர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, பயங்கரவாத தடுப்பின் போது மனித உரிமைகள் உட்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பில் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்குழு யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் போரின் பின்னர் உள்ள நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தக்குழு கலந்துரையாடல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது விஜயத்தின் போது இந்தக்குழு, பயங்கரவாதம் இராணுவத்தினாரால் மாத்திரம் தோற்கடிக்க முடியாது. அதற்கு தீர்க்கமான பேச்சுவார்த்தைகளும் அவசியம் என்று வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkr7.html

Geen opmerkingen:

Een reactie posten