தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

வடகில் மிகப்பெரிய ஊழல்! 100 மில்லியனிற்கு மேல் சுருட்டப்பட்டதா?

யுத்த அவலங்களுடன் வாழும் தமிழ் மக்களிற்கென சர்வதேச சமூகம் வழங்கிய நிதியில் வடமாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் பாரிய ஒப்பந்த மோசடியில் சுமார் 100 மில்லியன் வரையில் சுருட்டப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோரே அம்மோசடியில் பிரதான பங்கு வகித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்:-
உலக வங்கியினால் யுத்த பாதிப்பிற்குள்ளான எமது மக்களிற்கென உட்கட்டுமான வேலைகளை மேற்கொள்ளவென 2010ம் ஆண்டு நெல்சிப் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளுராட்சி மன்ற வீதிகள் அமைப்பு உள்ளிட்டவற்றை முன்னெடுக்க ஒதுக்கப்பட்ட நிதியில் 120 வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் என்பவரை பிரதம செயலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். இந்நபர் தனது தந்தையாரான சச்சிதானந்தன் மற்றும் நண்பரான தீபரூபன் ஆகியோரினை பங்காளர்களாக்கி ஸ்கலாட் என்ஜிரியங் எனும் போலி ஒப்பந்த நிறுவனத்தை தோற்றுவித்து அதற்கென வேலைகளை வழங்கி பெரும் மோசடிகளை செய்துள்ளார். அத்துடன் அவருக்கு நெருக்கமான ஜந்து ஒப்பந்த நிறுவனங்களிற்கே வேலைகளை ஒதுக்கி வழங்கியுமுள்ளார்.
மிகக்குறைந்த காலப்பகுதியினுள் சுமார் 40 மில்லியன் வரை சொத்து சேர்த்துள்ள அவரே இம்மோசடிகளை நடத்திய மையப்புள்ளி என கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை இம்மோசடி மூலம் கிட்டிய பணத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவின் வீடு பல மில்லியனில் மீள புனரமைக்கப்படுவதாகவும், யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் என்பவரிற்கு அரியாலையில் புதிய பங்களா ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் என்பவரை பிரதம செயலாளரே ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். ஊழல் மோசடிகள் அம்பலமானதையடுத்து அவரை ஆளுநர் சந்திரசிறி பதவி நீக்கஞ்செய்துள்ளார். பிரதம செயலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஒருவரை ஆளுநர் பதவி நீக்கஞ்செய்வது என்ன நடைமுறையென்பது தெரியவில்லை.
எனினும் தனி ஒரு நபரால் இம்மோசடி நடந்திருக்காதென்பது தெளிவானது. கூட்டு மோசடிகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற திட்டங்களிற்கான பொறியியலாளராக ஸ்ரெஜிலாதரன் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மீது வௌ;வேறான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதும் ஊழலிற்கு எதிரானவரென கூறப்படுகின்றது.
இந்நிலையில் மோசடி நபர்களினை காப்பாற்ற ஆளுநர் முற்படுவாரானால் அவரும் இம்மோசடிகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தை ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெறும் பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 100 மில்லியன் மோசடியென்பது சாதாரணமானதல்ல. அண்மைக்காலங்களில் மக்களிற்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் வடக்கில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மோசடி இதுவாகும்.
பக்கச்சார்பற்ற விசாரணைகள் காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அது வரை விசாரணைகளினை குழப்பாத வகையில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.ஜெகூ, யாழ்.மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீல் ஆகியோர் இடைநிறுத்தப்பட வேண்டும்.


இதேவேளை உள்ளுராட்சி அமைச்சின் அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரும் பக்கசார்பின்றி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் வலியுறுத்திக்கேட்டுக்கொண்டார். இதனிடையே தனக்கு கிட்டிய ஆவணங்கள் பிரகாரம் சுருட்டப்பட்டது 100 மில்லியன் எனக்கூறப்படுகின்ற போதும் அத்தொகை இதைவிட அதிகமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.Nothern-Rural-002Nothern-Rural-Ministy-0001
http://www.jvpnews.com/srilanka/85486.html

Geen opmerkingen:

Een reactie posten