[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 04:53.27 AM GMT ]
குறித்த மீனவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர்கள் 12பேரும் புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 36பேர் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழகம் சென்றடைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx5.html
நீர்கொழும்பு களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு- பெண்ணின் தாலிக்கொடி பறிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 05:08.08 AM GMT ]
பமுனுகம, சேதவத்தை பள்ளிக்கு எதிரில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு நேற்று மாலை 6மணியளவில் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஒரு மீட்கப்பட்டுள்ளது.
முதலில் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், ஹெலகந்த பிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான நபரின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து தெஹிவளை மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரின் சடலம் மீட்கப்பட்டது.
பாமிவத்தை பிரதேசத்தில் உள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்துக்களில் இவர்கள் இறந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் வந்தோரால் பெண்ணின் தாலிக்கொடி பறிப்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருவோர் பெண்களின் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்க மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்க மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண் கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது தலைக்கவசம் அணிந்துவந்த இருவரார், குறித்த பெண்ணின் தங்க ஆபரணங்கள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
எட்டு பவுண் தங்க நகைகள் இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx6.html
பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 05:13.28 AM GMT ]
பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து அதற்கும் குறைந்த பதவிகளை வகிக்கும் பத்தாயிரம் உத்தியோகத்தர்கள் அடுத்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரண்டாண்டுகளுக்கு மேல் கடமையாற்றிய 4462 பொலிஸ் உத்தியோகத்தர்களும், சாதாரண கடமையில் ஈடுபட்டு வரும் 4462 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக சாதாரண கடமைகளில் ஈடுபட்டு வரும் 846 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக 12 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐந்து பேருக்கு சேவை நீடிக்கப்பட உள்ளது.
தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx7.html
Geen opmerkingen:
Een reactie posten