தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை: சுவிஸ் விஞ்ஞானி!



மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
மண்சரிவு தொடர்பில் வெளிநாடுகளின் நிபுணத்துவ தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படவில்லை.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மண் சரிவு தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மண்சரிவுகளை தடுக்கும் பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்தும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து உலகின் முன்னிலை வகிப்பதாக ஜெனீவாவைச் சேர்ந்த இலங்கை விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு ஏற்படக் கூடிய மற்றும் மலைப் பாங்கான பிரதேசங்களில் சுவிஸ் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர்.
இலங்கையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது.
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெடிபொருட்களை பயன்படுத்தியதன் பின்னர், கட்டாயமாக அண்டிய பிரதேசங்களை சோதனையிட வேண்டும்.
மண்சரிவுகளை தடுக்கும் பாதுகாப்பு திட்டங்கள் சுவிட்சர்லாந்தில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மண் சரிவுகளை தடுப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், வெளிநாடுகளில் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx2.html

Geen opmerkingen:

Een reactie posten