தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

வடமாகாண மர நடுகை மாதம் நவம்பர் 1ம் திகதி ஆரம்பம்!



வடக்கில் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் வட மாகாண மர நடுகை மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மேற்படி மர நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்த நிலையில், புலனாய்வாளர்கள் மற்றும் படையினரால் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது.
அத்துடன், மேற்படி மர நடுகை திட்டம் தமிழீழ மாவீரர் தினத்தை ஒட்டியதாகவே நடைபெறுகின்றது என குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் பின்னர் நடைபெற்ற வடமாகாணசபை பேரவையில் நவம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியை மாகாண மர நடுகை மாதமாக அமுல்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து மாகாண கமநலசேவைகள், கால்நடை உற்பத்தி, விவசாயம், நீர்ப் பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் நவம்பர் மாதம் 1ம் திகதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டு, 1ம் திகதி நாரந்தனை பகுதியில் முதலாவது மர நடுகை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்கவுள்ளதுடன், தொடர்ந்து வடமாகாணம் முழுவதும் மர நடுகை நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq1.html

Geen opmerkingen:

Een reactie posten