தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

சிங்களப் புலிகள் விடுதலை! எட்டு வருட சிறைவாசம் முடிவு

மீரியபெத்த சம்பவம் முழு நிர்வாக முறையில் காணப்படும் பிரச்சினை
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 11:22.43 AM GMT ]
செல்வந்தர்களோ, முதலீட்டாளர்களோ காணி ஒன்றை கொள்வனவு செய்ய வரும் போது அவர்களை ஹெலிகொப்டர்களில் அரச செலவில் அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய காணிகளை கொடுக்கும் ஆட்சியாளர்கள், ஏழைகளை ஒரு மூலைக்குள் தள்ளிவிடும் செயற்பாடுகளையே கையாள்வதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
மீரியபெத்த நிலச்சரிவு பிரச்சினை என்பது நிர்வாக அதிகாரிகள், அந்த பகுதி மக்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் பிரச்சினையல்ல. அது முழு நிர்வாக முறையிலும் காணப்படும் பிரச்சினை என அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
கொழும்பு ராஜகிரியவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
மீரியபெத்தவில் நிலச்சரிவு ஏற்படும் முன்னர் கடந்த 2005 ஆம் ஆண்டும் அதற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு அங்கு நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மக்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்க தவறியதன் பிரதிபலனே இந்த அனர்த்தம்.
மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டது அவர்கள்தான் செல்லவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். தம்மில் சிலருக்கு காணிகள் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
மேலும் சிலர் காணிகள் கிடைத்தாலும் அங்கு சென்று குடியேற தமக்கு வசதிகள் இல்லை என கூறியுள்ளனர். காணி வழங்குவதாக கூறி எங்கேயோ ஒரு மூலையை அவர்களுக்கு காட்டுவதால் பயனில்லை.
வீட்டை எப்படி நிர்மாணித்து கொள்வார்கள், அங்கிருந்து எப்படி வேலைகளுக்கு செல்வார்கள், பிள்ளைகள் எப்படி பாடசாலைக்கு செல்வார்கள் போன்ற பிரச்சினைகள் உள்ளன.
சுனாமி அனர்த்தம் ஏற்படும் எனக் கூறி இதற்கு முன்னர் கடற்கரையோரங்களில் இருக்கு மக்களை அப்புறப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது.
நகரில் வாழும் வறிய மக்கள் வீடுகளில் இருந்து விரட்டப்படுகின்றனர். சம்பூரில் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவர்கள் அகதி முகாம்களில் உள்ளனர் எனவும் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjqz.html
சிங்களப் புலிகள் விடுதலை! எட்டு வருட சிறைவாசம் முடிவு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 11:32.53 AM GMT ]
சிங்களப் புலிகள் என்ற பெயரில் எட்டு வருட சிறைவாசம் அனுபவித்த கைதிகள் சற்று முன்னர் கம்பஹா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு உதவிய சிங்கள இளைஞர்கள் சிங்களப்புலிகள் என்ற பெயரில் 2006-08ம் ஆண்டுகளில் வேட்டையாடப்பட்டனர். அரசாங்கத்தின் அராஜகப் போக்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த இளைஞர்கள் விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்று RLO என்ற அமைப்பின் பெயரில் இயங்கிவந்திருந்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காணாமல் போன நிலையில் சுமார் பதினைந்து பேர் மட்டும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிங்களப் புலிகள் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நீண்ட கால சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு வரை சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில் மூவர் மட்டும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
RLO என்ற அமைப்பின் பெயரில் இயங்கிய மொல செனவிரத்ன, நிஹால் சேரசிங்க, சஹன் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த எட்டு வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கம்பஹா நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவர்கள் மூவரும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் மூலம் சிங்களப் புலிகள் என்ற பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையின் கடைசி சிங்கள ஆயுதப் போராட்ட அத்தியாயத்தின் கடைசிப்பாகம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjq0.html

Geen opmerkingen:

Een reactie posten