[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 07:06.47 AM GMT ]
இது பற்றி இந்த பொது மகன் பொலிஸாருடன், நீதியின் பிரகாரம் நான் நடந்துள்ளேன் ஏன் என்மீது குற்றம் சுமந்துகிறீர்கள் எனது வருமானத்தில் இவ்வாறு குற்றம் செய்யாமல் தண்டப்பணத்தை செலுத்த எனக்கு முடியாத காரியம் ஆகவே நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுக்க வேண்டாம், அதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்று பொலிஸாரிடம் வாதாடியுள்ளார்.
எனினும் இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காத போக்குவரத்து பொலிஸார் தங்களின் வழமையான கெடுபிடிகள் மூலம் குற்றம் இழைத்ததற்கான குற்றப்பத்திரிகையை எழுதி கொடுத்துள்ளனர்.
எனினும் அந்த குற்றப்பத்திரிகையில் அவர் புரிந்த குற்றம் தொடர்பாக தெளிவில்லாமல் காணப்படுகின்றது. இத்தோடு குறித்த நபரின் வாகன அனுமதி பத்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் மகர நீதிமன்ற பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பொலிஸாரின் தேவை குற்றம் செய்யாதவர்களின் மீது குற்றம் சுமத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதா?
இது தான் இலங்கையின் சட்டமா?, பொது மக்கள் மௌணிகளாக இருக்க வேண்டியது தான் அவர்களது தலைவிதி.
இது தான் இலங்கையின் சட்டமா?, பொது மக்கள் மௌணிகளாக இருக்க வேண்டியது தான் அவர்களது தலைவிதி.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmx7.html
மகிந்தவிற்கு முடியாவிட்டால் கோத்தபாய: ராஜபக்ஷவினர் முடிவு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 11:10.38 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சட்டத்தின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் அப்படி போட்டியிட்டால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடும் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக ஜே.வி.பி கூறியுள்ளது.
இப்படியான நிலைமையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டால், ராஜபக்ஷவினரில் அடுத்துள்ள பிரபலமான நபரான கோத்தபாய ராஜபக்ஷவை தேர்தலில் நிறுத்துவது என ராஜபக்ஷவினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த அமைப்புகள் பலவற்றின் ஆசியும் அனுசரணையும் இருப்பதால், ராஜபக்ஷவினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஷ இதனை விரும்பாத போதிலும் குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரிக்க மாட்டார் என கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlp3.html
வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றாதீர்கள்- நாடாளுமன்றத்தில் சிறீதரன்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:03.09 PM GMT ]
புலம்பெயர் தமிழர்கள் தனியான தமிழ் நாட்டுக்காக அழுத்தங்களை கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கே அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு சட்ட மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் பல பிரதேசங்களில் இராணுவம் தொடர்ந்தும் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.
இன மோதல்கள் நாட்டின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் போர் முடிந்து 5 வருடங்களின் பின்னர் கூட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் போயுள்ளது எனவும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வரும்பொது ஓட்டப் போட்டிக்கு பயிற்சி வழங்குவதுபோன்று பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. எவ்வாறு ஜனாதிபதியைப் பார்த்து சிரிப்பது. கோடிகள் அசைப்பது போன்ற பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளது.
யாழ்.இந்துக்கல்லூரியில் பொலிஸார் நேரடியாகச் பயிற்சி வழங்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் புரிந்து கொள்ள முடியாத அகல பாதாள வேறுபாடு உள்ளது.
ஜனாதிபதி கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோல் பட்டடை நாய்போன்று உள்ளதாக தெரிவித்திருந்தார்.
வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றவேண்டாம் என இங்கு தெரிவித்துக்கொள்கிறோம் என சிறீதரன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறீதரன் எம்.பி சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அஷ்வர் எம்.பி கூச்சல் போட்டதுடன், இடைநடுவில் எழும்பி மாற்றுக் கருத்துக்களை கூறினார்.
இதன்போது, பாராளுமன்றில் புத்தளத்துக் கழுதைகள் போன்று ஊளையிடுவதை நிறுத்துமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlqy.html
யாழ்.நாகர் கோயில் கிராமத்தின் செய்மதிப் படங்களை வெளியிட்டுள்ளது கூகிள் எர்த்!
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:23.28 PM GMT ]
ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனம் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன், மக்கள் மீள பிரதேசத்திற்கு திரும்புவதற்கும், 84 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையிலும் அங்கு 40 ஹெக்டேயர் விவசாயத்தை சரிபார்க்க உதவவும் இந்த மேம்படுத்தப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படும் என ஸ்கை பொக்ஸின் இணை ஸ்தாபகரும் கூகிள் அவுட்ரீச்சின் விரிவாக்கல் சட்டத்தரணியுமான ஜூலியன் மான் தெரிவித்துள்ளார்.
உயிர்களை பாதுகாக்கவும் சூழலை பாதுகாக்கவும் கல்வியை ஊக்குவிக்கவும் மனித தாக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான நல்ல திட்டங்களுக்காகவும் புதிய செயற்கைக்கோள் படங்கள் பங்களிப்புச் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வடக்கில் நாகர்கோயில் கிராமத்தின் சில படங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இது அந்த பிரதேசத்தின் மனிதாபிமான பணிகளுக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற போது இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் இடங்களை காட்டும் வகையில் கூகிள் செயற்கைக்கோள் படங்கள் வெளியிப்பட்டது.
அது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அப்போது கூறப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlqz.html
மஹிந்தவின் நகை கையளிப்பின் பின்னணியில் ஐ.நா விசாரணைக் குழு?
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:46.44 PM GMT ]
ஐ.நா.வின் மனிதவுரிமைக் கவுன்சிலின் விசாரணைக்கு முன்பாக இந்ந நகைகள் கையளிக்கப்பட்டமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அந்தக் குழுவின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட விடயங்களையும் தருஸ்மன் குழு பரிந்துரைகளாக இணைத்திருக்கிறது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளையும் ஐ.நா.மனிதவுரிமைக் குழுவின் இப்போதைய விசாரணைக்குழு கவனத்திலெடுக்கப் போகிறது.
பரிந்துரை 417ல் இருந்து பரிந்துரை 420 வரையான நான்கு பரிந்துரைகளும் புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களை குறி வைக்கின்றன.
புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போதும் மாபியா பாணியில் நிதி சேகரிப்பு இடம்பெறுகிறது என்றும் கோவில்களை நடாத்துதல், கடைகளில் முதலிடுதல் போன்ற வழிகளில் உள்ள இச்சொத்துக்கள் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களிடம் போய் சேரவேண்டுமென்று நேரடியாகப் பரிந்துரைக்கிறது.
இதனை நடைமுறைப்படுத்தவே சிறீலங்கா அரசு தாங்கள் தமிழீழ வைப்பகத்திலிருந்து கபளீகரம் செய்த நகைகளை இப்போது கையளித்து, புலம்பெயர்ந்த சொத்துக்களையும் மக்களிற்கு பங்கிடுங்கள் என்று விசாரணையைத் திசை திருப்ப முனைகின்றது.
வெளிநாடுகளிலுள்ள சிங்கள அமைப்புக்களும் சிங்களவர்களும் போரில் ஏற்பட்ட பாதிப்புக்கள், மேற்குலக நாடுகள் புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும, ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என 2009ல் விடுத்த அறிக்கைகளையும் ஐ.நா.வின் விசாரணை அமைப்பிற்கு அனுப்பி வருகின்றனர் என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை இந்த ஆய்வில் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlr1.html
Geen opmerkingen:
Een reactie posten