சிரியா , ஈராக் போன்ற நாடுகளில் நிலைகொண்டுள்ள இத்தீவிரவாதிகள் நிலைமீது அமெரிக்கா மற்றும் அதன் நேசநாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தற்போது இத்தாக்குதலை சமாளிக்கும் திறன் ISIS தீவிரவாதிகளுக்கு வந்துள்ளது என்பது பல உலக நாடுகளை அதிரவைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். இதேவேளை அமெரிக்கா இதுவரை காலமும் நடத்திய வான் தாக்குதலை நிறுத்தி, அதி நவீன (ஏவுகணை தாக்குதலி இருந்து தப்பிக்கவல்ல) விமானங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.
பிரான் மற்றும் பிரித்தானியாவும் இதுபோன்ற அதி சக்திவாய்ந்த விமானங்களை பாவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ISIS தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள சில பகுதிகளில் எண்ணை வளம் அதிகம் காணப்படுகிறது. இதனை அவர்கள், எடுத்து கறுப்புச் சந்தையில் விற்று வருகிறார்கள். இதனூடாக ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்கள் உழைத்து வருவதாக கூறப்படுகிறது. பணம் இருந்தால் எந்த ஆயுதத்தையும் வாங்கலாம். அது தான் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், பெரும் சிக்கலில் மேற்கு உலக நாடுகள் தள்ளப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
http://www.athirvu.com/newsdetail/1323.html
Geen opmerkingen:
Een reactie posten