தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

கிழக்கின் உதயம், மர நிழலில் வாடும் மக்களின் அவலம்!

வரவு செலவு திட்டத்தில் வட, கிழக்கு மக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளனர்: விஜயகலா மகேஸ்வரன்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 01:10.45 AM GMT ]
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
வடக்கு மாகாணம் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய மாகாணம் என்ற போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
வடக்கின் சுகாதார வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
யாழ்ப்பாண வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் கிடையாது.
எம்.ஆர்.ஐ. பரிசோதனைகளை நடாத்த போதியளவு வசதிகள் கிடையாது.
அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நலன்கள் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் 1700 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை படையினர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர்.
கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால் தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சிறப்பானது: நிமல் சிறிபால டி சில்வா
2015 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த வரவு செலவுத்திட்டம் நடைமுறை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி எப்போதுமே மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குகிறார். எனவே இது தேர்தலை இலக்காகக்கொண்டு செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் என்பதை அமைச்சர் மறுத்தார்.
ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட்ட பல அமைச்சர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszARcKXls1.html
ஜனாதிபதி இருக்கும்வரை புலி ஆதரவாளர்களினால் நாட்டைப் பிரிக்க முடியாது: ஏர்ல் குணசேகர
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 02:19.34 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கும் வரையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டை பிளவுபடுத்த முடியாது என பிரதி அமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி, இன, மத மற்றும் மொழி பேதங்களைக் களைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மட்டுமே நாடு பிளவுபடுவதனை தடுக்க முடியும்.
சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வளவு தலை தூக்கினாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ஆட்சி செய்யும் வரையில் நாட்டில் பிரினவினைவாதம் ஏற்பட வாய்ப்பில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த முயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய சக்தி பொது மக்களுக்கு காணப்படுகின்றது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்தக் கருத்துக்களை பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXls3.html

கிழக்கின் உதயம், மர நிழலில் வாடும் மக்களின் அவலம்!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 03:28.52 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் இதுவரைக்கும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மரத்தின் நிழலில் நகர்த்தும் அவல நிலையில் கிழக்கு மாகாண மக்கள் வாழ்கின்றனர்.
இலங்கையின் கிழக்கே எந்த ஒரு மனிதனுக்கும் பிரச்சனை இல்லை அபிவிருத்தியில் முதலிடத்தில் இருக்கின்றது என அரசு தெரிவிக்கின்றது.
ஆனால் யுத்தம் முடிவடைந்தும் தாங்கள் மரத்தின் நிழலின் கீழே தமது அன்றாட வாழ்க்கையை போக்குவதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு கால கட்டத்தில் இந்த மக்கள் அமைச்சர்களின் எவ்வித உதவிகளும் இல்லாமல் தாமாகவே விவசாயம் செய்து தமது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் .
ஆனால் இன்று இவர்கள் அனாதை போன்று இருக்கின்றர்கள் .
கிழக்கில் இருக்கும் அமைச்சர்கள் இவர்களின் குறைகளை இதுவரைக்கும் சென்று பார்வையிடவில்லை என அந்த மக்கள் தெரிவிக்கிறனர் .
கடந்த கால யுத்தம் தங்களையும் அனாதை ஆக்கியது மட்டுமில்லாமல் தங்கள் வயல்கள், குளங்கள் என அனைத்தையும் தற்போது காணாமல் போகசெய்துள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
காடுகளில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் மூலம் யானைகள் வாழ்வதற்கு இடம் இல்லாமல் தங்களது கிராமத்துக்கு வருவதாகவும், மிருகங்களின் சுத்தந்திரமும் பறிபோய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இன்று கிழக்கில் ஒரு நாளைக்கு ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகுகின்றார்கள்.
இந்த மக்கள் கேட்பது பணம் அல்ல தங்களுக்கு வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான வீடும், காணாமல் போயுள்ள விவசாய நிலங்களையும்,குளங்களையுமே.
இன்று இவர்கள் சேற்றில் கால் வைத்தல்தான் ஏனையவர்கள் சோற்றில் கை வைக்கமுடியும்.
விவசாயம் செய்யும் ஒவ்வொரு தமிழனும் விவசாயத்தை புறக்கணித்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பாருங்கள்.
வடக்கு,கிழக்கு பாரிய அபிவிருத்தி அடைவதாக கூறுகின்ற அமைச்சர்களே ஒரு கால கட்டத்தில் உங்களுக்கு சமைத்து சாப்பாடு போட்டவர்கள் இவர்கள், செஞ்சோற்று கடன் தீர்க்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இவர்களும் தமிழர்கள்தான்.
நீங்கள் இன்று மாடி வீட்டில்,ஆனால் உங்களுக்காக உயிரை விட்டவர்களின் உறவுகள் மர நிழலில்,
தமிழர்களின் ஏக பிரதிநிதிகளே சைக்கிளில் திரிந்த நீங்கள் இன்று குளிரூட்டிய வாகனத்தில் திரிகின்றீர்கள் உங்களுக்கு இவர்களை பார்ப்பதற்கு நேரம் இல்லையா ?
கிளிவெட்டியிலுள்ள சம்பூர் அகதிமுகாமில் பசிதாங்கமுடியாது தற்கொலைக்கு முயற்சித்த இந்த மக்களுக்கு ஒரு நேரம் சாப்பாடு கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் ஏன் பதவியில் இருக்கின்றீர்கள் ?
உங்களது வாகனங்களுக்கு செலவு செய்யும் எரிபொருள், நீங்கள் தேவைப்பட்டால் இந்தியாவுக்கு சென்று ஓய்வெடுக்கும் பணத்தினை இந்த மக்களுக்கு கொடுக்கலாம் தானே.
உங்களால் முடிந்தால் தனி நபராக சென்று அந்த மக்களை சந்தித்து பாருங்கள்,அப்போது புரியும் உங்களுக்கு அந்த மக்கள் தரும் பரிசு.
மாயாஜால அரசியல் நடத்துவதை விட்டு உங்களுக்கு வாக்களித்த மக்களையும் கொஞ்சம் பாருங்கள், நீங்கள் போகும் போது எதுவும் கொண்டு போக போவதில்லை, இந்த மக்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது.
தமிழர்களை இனியும் முட்டாள் ஆக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXls5.html

Geen opmerkingen:

Een reactie posten