[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 12:14.49 AM GMT ]
இந்த பட்டியலில் இலங்கை 79 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தை வகிக்கிறது. இந்தியா 19வது இடத்தை பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான ஆண், பெண் இடையிலான பால் சமத்துவ இடைவெளி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதன்கீழ் உலகில் உள்ள 144 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் தரப்படும் இடங்கள் கருத்திற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி பங்களாதேஷ் பெண்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் 8 ஆவது இடத்தை வகிக்கிறது.
உலகளாவிய ரீதியில் ஐஸ்லாந்து முதலாம் இடத்தையும் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் நோர்வே மூன்றாம் இடத்தையும் சுவீடன், டென்மார்க் என்பன நான்காம் ஐந்தாம் இடங்களையும், கனடா 19 வது இடத்தையும் அமெரிக்கா 20வது இடத்தையும் பிரித்தானியா 26 இடத்தையும் பிடித்துள்ளன.
இலங்கை உலகளாவிய ரீதியில் 79 இடத்தையும் இந்தியா 114 இடத்தையும் வகிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlwz.html
அநுராதபுர புனிதநகரில் இரவுநேர கேளிக்கை அரங்குகள்: ஐ.தே.க குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 12:47.07 AM GMT ]
அநுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இது தொடர்பான தகவலை வெளியிட்டார்.
ஜெயஸ்ரீ மஹாபோதி மற்றும் ருவான்வெலிசாய ஆகிய விஹாரைகள் அமைந்துள்ள அநுதராபுரம் புனித நகரப் பகுதியில், இரவுநேர களியாட்ட அரங்குகள் செயற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்ததிட்டமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது: ஐ.தே.க
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
பொய் வாக்குறுதிகள் நிறைந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டத்தை நடுநிலையான புத்திஜீவிகள் அடையாளப்படுத்துகின்றனர்.
இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டங்களை இழிவு படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பொய்யுரைப்பதனை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் வகையில் அமைய வேண்டும். எனினும், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் அவ்வாறான விடயங்களை காணக்கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் 11904 கோடி ரூபா பணம் ராஜபக்சக்கள் மேலதிகமாக ஒதுக்கிக்கொண்டுள்ளனர்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் வைத்திய பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையின் அடிப்படையில் நபர் ஒருவருக்கு வெறும் 25 ரூபாவே பரிசோதனைகளுக்காக செலவிட முடியும்.
இந்த தொகையைக் கொண்டு பரிசோதனை செய்ய முடியுமா?
அரசாங்கம் சிறுநீரக நோயாளிகளையும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw1.html
பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட வேண்டும்: ஞானசார தேரர்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 12:58.36 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பௌத்தர்களையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்.
வெட்கம் இருந்தால் இந்த சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு ஆட்சியாளரும் பௌத்தர்களை பாதுகாக்க மெய்யாகவே நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டவிரோத மதமாற்றம், பௌத்த பிரசூர நியமச் சட்டம், பௌத்த விஹாரை மற்றும் தேவாலய கட்டளைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும்.
18ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனால் நாட்டுக்கோ பௌத்தர்களுக்கோ நன்மை ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw2.html
Geen opmerkingen:
Een reactie posten