தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

இலங்கையில் பல விடயங்களில் முன்னேற்றமில்லை: ஐ.நா மனித உரிமைகள் குழு



நாமல் ராஜபக்ஷ கொஸ்லாந்த விஜயம்! பொதுமக்களுக்கு ஆறுதல்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 04:43.00 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த பகுதிக்கு இன்று மாலை நேரில் விஜயம் செய்துள்ளார்.
கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டரில் கொஸ்லாந்தைக்கு சென்ற நாமல் ராஜபக்ஷ, மோசமான வானிலையைப் பொருட்படுத்தாது கொஸ்லாந்தையில் தரையிறங்கியுள்ளார்.
மேலும் பாதுகாப்புத் தரப்பினரின் கடுமையான தடைகளை மீறி மண்சரிவுக்குள்ளான மீரியபெத்த நிலப்பரப்புக்கும் விஜயம் செய்துள்ளார்.
அதன்பின்னர் கொஸ்லாந்த தமிழ் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். பின்னர் பூனாகலை இடைத்தங்கல் முகாமுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த விஜயத்தின் போது நாமல் ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீரியபெத்தையில் மண்சரிவுக்குள்ளான நிலப்பரப்புக்கு துணிச்சலாக விஜயம் மேற்கொண்ட ஒரே அரசியல்வாதி நாமல் ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkw3.html
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு முதல்வர் அனுதாபம்! உதவிகள் செய்ய நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 05:02.16 PM GMT ]
பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி அனர்த்தம் தொடர்பில் முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி அனர்த்தச் சம்பவத்தில் இதுவரையில் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்ற பத்திரிகை செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முன்னதாகவே பல இன்னல்களின் மத்தியில் வாழ்கின்ற மலையக மக்களுக்கு இந்த இயற்கை அனர்த்தம் பேரழிவை உண்டாக்கியிருக்கின்றமை அனைவரின் உள்ளங்களையும் வேதனைக்குள் ளாக்கியுள்ளது.
இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த எமது சகோதர சகோதரியர்கள், குழந்தைகளை நினைவுறுத்தி வடமாகாண சபையின் சார்பிலும், வடபுலத்திலுள்ள மக்கள் சார்பிலும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்று இது பற்றிய சகல நடவடிக்கைகளையும் எமது அலுவலர்கள் எடுத்து விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, உதவிகளை வழங்குவர்.
எமது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவாஞானம் மேற்பார்வையின் கீழ் சகல நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkw4.html
இலங்கையில் பல விடயங்களில் முன்னேற்றமில்லை: ஐ.நா மனித உரிமைகள் குழு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 04:42.45 PM GMT ]
இலங்கையில் போருக்கு பின்னர் பல முன்னேற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இலங்கையால் கடந்த 7ஆம் 8 ஆம் திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையின் மீதே இன்று ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு சரத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு நீதித்துறையின் நியமனங்கள் யாவும் ஜனாதிபதியின் வசம் சென்றுள்ளன.
2013 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதம நீதியரசர் மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை நோக்கும் போது இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுகிறது.
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம், கருத்து சுதந்திரமின்மை, கைதுகள், சிறையடைப்பு, சித்திரவதைகள் என்பன தொடர்பில் குழு தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை குறிப்பிட்ட விடயங்களில் தமது முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkw2.html

Geen opmerkingen:

Een reactie posten