தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

ஐ.நா மனித உரிமை கமிட்டி பக்கச்சார்பாம்…

மஹிந்தவுக்கு சாமி அவசர கடிதம்….

இந்திய மீனவர்கள் மீதான மரண தண்டனை குறித்து தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்திர் கருத்து தெரிவித்துள்ள சாமி, ‘2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு சென்ற பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதுதொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று கூறியுள்ளார் சாமி.
http://www.jvpnews.com/srilanka/85563.html

மலையக மண்சரிவில் 309 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் வெளியேற்றம்

இதற்கமைவாக, கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் 4 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை, ரம்படை பகுதியில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேரும் சீன் தோட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் குபுரு ஓயா கங்வெல பகுதியில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் குயின்ஸ்பரி தோட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும் நுவரெலியாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 143 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் 5 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நுவரெலியா, வெவரலி பகுதியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும் ஊவாக்கலையில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரும் ருவானெலிய தோட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும் நுவரெலியா நகர் பகுதியில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை வலப்பனை பகுதியில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 173 பேர் 2 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை, டியனில்லை கோவில் பிரதேசத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேரும் சென்லேன்ட் பகுதியில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, ஹங்குராங்கத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலமுல்லவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் மெரிகோல்ட் பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும் வெளியேறியுள்ளனர். ஹம்பகமுவ பிரதேச செயலகத்துக்குபட்ட பகுதிகளில் 1 குடும்பமும் 31 பேரும் வெளியேறியுள்ளனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் இணைந்து வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பதுளை உனுகொல்ல மற்றும் மொரகொல்ல பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவி வருவதால் அங்கிருந்த 72 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.lanka_badullaKoslanda-ArmeKoslanda-Arme-01Koslanda-Arme-02Koslanda-Arme-03Koslanda-Arme-08Koslanda-Arme-07Koslanda-Arme-06Koslanda-Arme-05Koslanda-Arme-04Koslanda-Arme-09Koslanda-Arme-10Koslanda-Arme-11Koslanda-Arme-12Koslanda-Arme-13
http://www.jvpnews.com/srilanka/85569.html

ஐ.நா மனித உரிமை கமிட்டி பக்கச்சார்பாம்…

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுமார் 700 காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஏன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டி கருத்து வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
2006ம் ஆண்டில் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐக்கிய நடுகள் மனித உரிமை கமிட்டி கேள்வி எழுப்பியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் கமிட்டியின் நிலைப்பாட்டின் மூலமே பக்கச்சார்பான செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த காவல்துறை உத்தியோகத்தர்களே புலிகள் கொலை செய்திருந்தனர் எனவும், இவ்வாறான 101 சம்பவங்களை குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/85573.html

Geen opmerkingen:

Een reactie posten